
பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டே தான் போகிறது என்று தான் சொல்லணும் பிக் பாஸ் வீட்டில் பழய கலகலப்பு இல்லை என்று தான் மீண்டும் ஆர்த்தி மற்றும் ஜூலியை விஜய் டிவி உள்ளே அனுப்பியது அதுக்கு பலன் கிடைத்துள்ளது என்று தான் சொல்லணும் ஜூலியின் காதல் மீண்டும் அரங்கேறுகிறது
முன்னதாக காயத்ரி, ஜூலி, ஆர்த்தி உள்ளே இருந்த போது ஒரு நாள் ஜூலி காயத்ரியிடம் ஆரவ்வை பார்க்கும் என்னனமோ தோணுகிறது என கூறியிருந்தார், இதனை காயத்ரி மற்றவர்களிடம் கொளுத்தி விட்டார்.
அந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது, ஆம் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ ஒன்றில் ஆர்த்தி ஜூலியிடம் அன்னைக்கு ஒரு நாள் காயத்ரிடம் இதோ ஆரவ்வை பார்க்கும் போது என்னமோ தோணுதுன்னு சொல்லி இருந்தயே என்ன அது என்று கேட்கிறார்.
அதற்கு ஜூலி ஆரவ்வை பார்க்கும் அப்பா பீலிங் வருதுன்னு தான் சொன்னேன் என மழுப்புகிறார், இதனால் இன்று பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை வெடிக்கும் என தெரிகிறது.
