Tuesday, April 23
Shadow

அச்சம் என்பது மடைமையடா – திரைவிமர்சனம் (அச்சமில்லை) RANK – 3.5/5

ஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

சிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல்வயப்பட்டு விடுகிறார் சிம்பு.

மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்று மஞ்சிமா கேட்கிறார். அதற்கு சிம்பு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக கூறுகிறார்.

அதன்பிறகு, மஞ்சிமா மோகனும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மஞ்சிமாவுக்கும் சிம்புவைப் போன்றே நீண்ட தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தும், இதுவரை பைக்கில் பயணித்ததே கிடையாது என்பதால் சிம்புவையும் கூட அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்.

அதன்படி, இருவரும் சேர்ந்து பைக்கில் மகாராஷ்டிரா நோக்கி பயணமாகிறார்கள். மகாராஷ்டிரா நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்களது பைக் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்துல சிம்பு தன்னோட காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார்.

அதன்பிறகு, சிம்பு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்விழித்து பார்க்கும்போது மஞ்சிமா மோகனை காணவில்லை. அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. அப்போதுதான் சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் அங்கிருந்து சென்றதற்கான காரணமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினை குறித்து தெரிய வருகிறது.

அதன்பிறகு சிம்பு, மஞ்சிமா மோகனை தேடிக் கண்டுபிடித்து அவளது பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்திற்கு மிகப்பெரிய பலமே சிம்புதான். அவர் பேசும் வசனங்கள் ஆகட்டும், முகத்தில் கொடுக்கிற சின்ன சின்ன முகபாவனைகளாகட்டும் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தளவுக்கு கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிம்பு. இதுவரை பார்த்த சிம்பு இல்லை இந்த படத்தில் அப்படி ஒரு மாற்றம் அருமையான நடிப்பு முதல் பாதி இன்னசன்ட் சிம்பு சரி இரண்டாம் பாதி மிரட்டும் அதிரடியில் மட்டும் இல்லை நடிப்பிலும் மிரட்டுகிறார் என்று சொன்னால் மிகையாகது அப்படி ஒரு நடிப்பு சினிமாவுக்கு வந்து இத்தனை வருடம் ஆகி சிம்பு ஒரு வழியாக நானும் சிறந்த நடிகன் என்று நிருபித்துள்ளார். சில இடங்களில் ஒரு முக்கிய நடிகரை நினைவில் கொண்டு வருகிறார்.

மஞ்சுமா மோகன் முதல் படம் நடிப்பிலும் சரி அழகிலும் சரி அருமையாக நடித்துள்ளார் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னும் ஒரு சிறந்த அழகான நடிகை என்று சொல்லலாம்.

படத்தின் இன்னும் ஒரு பிளஸ் என்று சொன்னால் அது சதீஸ் இதுவரை சின்ன சின்ன பாத்திரத்தில் வந்த சதீஸ் இந்த படத்தில் மிக முக்கிய பாத்திரம் கிடைத்த வாய்ப்பை அருமையாக செய்துள்ளார். எனக்கு நடனம் மட்டும் இல்லை நடிப்பிலும் அசத்துவேன் என்று அசத்தியுள்ளார் .

படத்தின் முதுகு எலும்பு ரகுமான் இசை படத்தி எல்லா பாடல்களும் அருமை அதிலும் தள்ளி போ தள்ளி போ பாடல் மிக அருமை இது மட்டும் இல்லை படத்தில் உள்ள எல்லா பாடல்களும் அருமை அதை விட பின்னணி இசை சூப்பர்

கெளதம் மேனன் அவர் வேலையை எப்பவும் போல அருமையாக செய்துள்ளார். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி திரில்லர் காதல் என்று கலந்து ஒரு காக்டெயில் என்று சொல்லும் அளவுக்கு அருமை இரண்டாம் பாதி கடைசி பத்து நிமிடத்தில் இன்னும் கவனம் செய்து இருந்தால் இன்னும் மிக இச்றந்த படமாக இருந்து இருக்கும்

மொத்தத்தில் அச்சம் என்பது மடைமையடா கெளதம் மேனனின் வெற்றி படைப்பு

RANK – 3.5/5

Leave a Reply