Thursday, October 29
Shadow

மீன்குழம்பும் மண்பானையும் -திரைவிமர்சனம் ருசிக்க ரசிக்க RANK 3/5

புரிதல் விட்டு கொடுத்தல் வாழ்கையில் எல்லா நன்மைகளும் சந்தோசமும் நிலத்து இருக்கும் என்பதே ஒன் லைன் கதை.

பிரபு அறிமுக ஹீரோ காளிதாஸ் ( நடிகர்ஜெ யராம் மகன் ) நாயகி ஆஷ்னா சவேரி ஊர்வசி, சந்தானபாரதி, இளவரசு, பூஜகுமார், M.S. பாஸ்கர், தினேஷ் மாஸ்டர் சிறப்பு தோற்றம் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் Y.G. மகேந்திரன் அவரின் மனைவி மற்றும் பலர் நடிப்பில் இம்மன் இசையில் லக்ஷ்மன் ஒளிப்பதிவில் சிவாஜி பேரன் துஷ்யந்த் தயாரித்து அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் மீன்பானையும் மண் குழம்பும்

மலேசியாவில் வாழும் இரண்டு குடும்பம் ஒன்று பிரபு நயகானின் அப்பா இன்னொருவர் ஊர்வசி இவர் நாயகியின் அம்மா இந்த இரண்டு குடும்பத்தை மையமாக இதில் நடுவில் மலேசியா ரவுடி மலைக்க மாலா அதாவது பூஜாகுமார் வைத்து எடுக்க பட்ட படம் தான் மீன்குழம்பும் மண் பானையும் படம்.

காரைக்குடி செட்டியார் பிரபு தன் மனைவிக்கு பிரசவ நேரத்தில் குழந்தையை பெற்று எடுத்து கொடுத்து ஓர்ந்து விடுகிறார் மனைவி மேல் அதிக பாசம் கொண்ட பிரபு உறவினர்கள் வேறு கல்யாணம் செய்ய சொல்லி தொந்தரவு செய்கின்றனர் அப்படி செய்யாவிட்டால் உங்கள் உறவு வேண்டாம் என்று வெட்டி விட்டு போகிறார்கள். இதனால் இனி இந்த ஊர் வேண்டாம் என்று மலேசியா போகிறார். அங்கு உழைப்பால் மீன்பானையும் மன்குழம்பும் என்ற ஹோட்டல் நடத்துகிறார்.தன் மகனையும் மிகவும் செல்லமாக வளர்கிறார் வளர்ந்த காளிதாஸ் அப்பாவை மதிப்பதில்லை இந்த காலத்து கல்லூரி மாணவர் போலவே நடக்கிறார் அவரின் பாசம் புரியவில்லை இதனால் மனம் உடைந்த பிரபு தன் நண்பனான Y.G. மகேந்திரனிடம் விஷயத்தை சொல்ல உடனே எங்கள் வீட்டுக்கு புறபட்டு வா என்று சொல்ல அங்கு செல்ல அங்க கமல் சாமியாராக வருகிறார். இந்த இருவரிடமும் பேசி பிரச்சனையை புரிந்து கொண்டு ஒருவம் ஒன்று எண்ணங்களை மாற்றுகிறார் அதாவது காளிதாஸ் உருவில் பிரபுவும் பிரபு உருவில் காளிதாஸ் என்று மாற்ற இருவருக்கும் வரப்படும் புரிதல் தான் கதை இவர்களுக்கும் மட்டும் இல்லாமல் இவர்களை சுற்றி இருப்பவர்கள் வாழ்கையையும் மாற்றங்களையும் மிக சிறப்பான திரைகதையில் கலப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் .

அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் நிச்சயம் பாரட்ட வேண்டிய இயக்குனர் நாம் டிக்கெட்கு கொடுக்கும் காசுக்கு மன திருப்பதி சந்தோசம் அமைதி எல்லாவற்றையும் கொடுக்கும் படம் அதோடு வாழ்கையில் இப்படி வாழ்ந்தால் பிரச்சனைகள் வராது என்று இரண்டு குடும்பத்தை மையமாக வைத்து அருமையாக கதையும் திரைக்கதையும் காட்சிகளும் அமைத்துள்ளார். மிக பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கு என்று தேவையில்லாமல் கதையை விட்டு போகாமல் இந்த கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் இயக்கிய விதம் அருமை .

பிரபு சொல்லவா வேணும் அன்று பார்த்த அதே இளமை அதே நடிப்பு இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கம் தரும் அப்பாவாக பிரபு அதே போல் காளிதாஸ்க மாறும் போது எண்பதுகளில் பார்த்த பிரபு அப்படியே கண் முன்னாடி வருகிறார்.

காளிதாஸ் நாயகன் நடிகர் ஜெயராம் மகன் புலிக்கு பிறந்தது பூனையாகுமா ஒரு ஹீரோக்கான எல்லா அம்சங்களும் நிறைந்த ஹீரோ நடிப்பு டான்ஸ் காமெடி சண்டை இப்படி எல்லாம் தெரிந்த வித்தைக்காரன் நிச்சயம் தமிழில் மிக பெரிய ஹீரோவாக வளம் வருவார். அப்பாவை மிஞ்சும் ஹீரோவாக வருவார் .நீங்களும் அப்பா மாதிரி மலையாளம் பக்கம் போகாம இங்கயே இருங்க வாழ்த்துகள்

பூஜாகுமார் மல்சியா ரவுடி முதல் காட்சியில் மட்டும் அதிரடி அப்புறம் பிரபு போட்ட காபி குடித்தவுடன் பிரபுவை சுட்டும் பூனையா சும்மா கலக்கி இருக்கிறார் . ஆஷ்னா துள்ளல் நடிப்பில் எல்லோரையும் கவர்ந்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஒரு சின்ன கேமியோ சாமியார் பாத்திரம் இவர் வந்தவுடன் தான் படத்தில் திருப்பம்
இவரை படி நாம் என்ன சொல்ல விவேகானந்தை வேடத்தில் வரும் சாமியாரைவிட இறுதியில் வரும் உலகநாயகன் சாமியார் அருமை அரங்கமே கல கலப்பு
ஊர்வசி, சந்தானபாரதி, இளவரசு,, M.S. பாஸ்கர், தினேஷ் மாஸ்டர் Y.G. மகேந்திரன் அவரின் மனைவி இவர்களுக்கு கொடுத்த பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் .

படத்துக்கு இசை மிக பெரிய பக்கபலம் என்று சொல்லணும் இம்மானின் இசையில எல்லா பாடல்களும் சூப்பர் அதே போல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மலேசியாவை அழகாக காண்பிதுள்ளார்.

மீன்குழம்பும் மண்பானையும் எல்லோரும் ருசிக்க ரசிக்க வைக்கும் RANK 3/5

Leave a Reply