
பிரபஞ்சத்திலேயே மிக பெரிய சக்தியாக கருதப்படுவது ‘பெண்’ சக்தி. படிப்பு, விளையாட்டு என்பதை தாண்டி தற்போது திரையுலகிலும் ஆழமாக கால் பதித்து, மிக பெரிய வெற்றி சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் பெண்கள். வெறும் கதைக்கு தேவையான வலுவான கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல், அதிரடி நாயகிகளாகவும் திரையுலகில் அவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்….’கில் பில்’, ‘லாரா கிராப்ட்’, ‘சார்லி ஏஞ்செல்ஸ்’, ‘கேட் உமன்’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களே அதற்கு சிறந்த உதாரணம்…. ஹாலிவுட் மட்டுமின்றி, இந்திய கதாநாயகிகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் தங்களின் அதிரடி அவதாரத்தை ‘குவான்டிகோ’ மற்றும் ‘xxx’ திரைப்படங்களில் வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘வேன் ஹெல்சிங்’, ‘டாம் ரைடர்’, ‘ரெசிடண்ட் ஈவில்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும், வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை பெற, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘அண்டர் வேர்ல்ட் சீரிஸ் – 5 ஆம் பாகமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துணிச்சலோடு, அதிரடியையும், அழகையும் கலந்து களம் இறங்கும் கதாநாயகிகள் தான் அந்த எதிர்பார்ப்புக்கு காரணம் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுக்காக ஆபத்தான பயிற்சிகளை கதாநாயகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்….அதுமட்டுமின்றி, அவர்களின் கதாபாத்திரத்தை கன கச்சிதமாக செதுக்கும் பணிகளில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்கிறார்கள் இயக்குநர்கள்.
சோனி பிச்சர்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி இந்த ‘அண்டர் வேர்ல்ட் பிளட் வார்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் வெளியாக இருக்கின்றது.
