
அபிஷேக் பச்சன் இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் இந்திய நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரது மகனுமாவார். இவர் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யைத் திருமணம் செய்துள்ளார்.
ஜெ.பி.தத்தாவின் ரேப்புஜி (2000)-த்தில் பச்சன் முதன்முதலில் தோற்றமளித்தார். 2004 ஆம் ஆண்டில் வெளி வந்த தூம் மற்றும் யுவா படங்களில் நடித்தார். யுவா படத்தில் இவரது நடிப்புக்காக பல விருதுகளைப் பெற்றார், அதில் மிகச் சிறந்த துணை நடிகர் வகைக்காக இவர் வாங்கிய இவருடைய முதல் பிலிம்பேர் விருதாகும்.
அபிஷேக் பச்சன் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகனாவார்; இவருடைய மூத்த சகோதரி சுவேதாபச்சன்-நந்தா ஆவார் (பி.1974). இவருடைய பாட்டனார், ஹரிவன்ஷ் ராய் பச்சன் நன்கு அறிமுகமான இந்தி இலக்கியங்களின் கவிஞர் ஆவார். இவருடைய குடும்பத்தின் கடைசி பெயர் ஸ்ரீவஸ்தவ் ஆக இருந்தது. பச்சன் என்பது இவரது பாட்டனார் பயன்படுத்திய புனைப்பெயராகும். எனினும் இவருடைய தகப்பனார், அமிதாப் திரைப்படத்துக்கு நுழையும்பொழுது, இவர் தன்னுடைய தகப்பனாரின் புனைப்பெயரையே பயன்படுத்தினார். தன்னுடைய பாட்டியின் புறத்திலிருந்து சீக்கிய,பஞ்சாபி கலாச்சாரத்தினை உடையவராகவும் அதேவேளையில் தன்னுடைய தாய் ஜெயா பாதுரியின் புறத்திலிருந்து கூலின் பிராமின்,பெங்காளி கலாச்சாரத்தை உடையவராகவும் பச்சன் இருக்கிறார்.
பச்சன் வாசிப்பு இடர்ப்பாடு உள்ள குழந்தையைப் போல் இருந்தார். இவர் மும்பையில் உள்ள ஜம்ணபை நர்சி பள்ளி மற்றும் பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் படித்தார். புது டெல்லியில் உள்ள வசந்த் விஹார், மாடர்ன் பள்ளி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஐக்லோன் கல்லூரியிலும் படித்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இவருடைய படிப்பை தொடருவதற்கு அமெரிக்காவுக்குச் சென்றார், ஆனால் தன்னுடைய தகப்பனாரின் ஏபிசிஎல் நிறுவனம் பிரச்சினையை சந்தித்த காரணத்தினால், தன்னுடைய படிப்பை பாதியில் விட்டு தன்னை நடிப்பு தொழிலில் ஈடுபடுத்திக்கொண்டார்.
ஜெ.பி.தத்தாவின் அகதி 2000 த்தோடு பச்சன் தன்னுடைய நடிப்புத் தொழிலை ஆரம்பித்தார். பின்னர் பச்சன் மற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அதில் குச் நா கஹோ, பஸ் இத்னா ச க்ஹ்வாப் ஹே போன்ற நன்றாக வெற்றி பெறாத படங்களும் அடங்கும்.
மெயின் பிரேம் கி டிவனி ஹூன் (2003) மற்றும் 2004-ஆம் ஆண்டில் மணி ரத்தினத்தின் யுவா ஆகியவற்றில் இவருடைய நடிப்புத் திறமையானது இவரை ஒரு நடிகர் என மெய்ப்பித்துக் காட்டியது.அதே வருடத்தில் அவர் நடித்த தூம் திரைப்படம் வியாபார ரீதியாக நல்ல வெற்றி பெற்றது. 2005-ஆம் ஆண்டில், பண்டி ஆர் பாப்லி, சர்கார் , தஸ் , மற்றும் பிளப்மாஸ்டர் என தொடர்ச்சியாக நான்கு பெரும் வெற்றிப் படங்களின் புகழோடு பச்சன் திரைப்படங்களில் நடித்திருந்தார்.சர்கார் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான இவருடைய இரண்டாவது பிலிம்பேர் விருதினை இவர் பெற்றார். மேலும் பச்சன் சிறந்த நடிகர் விருதுக்காக முதன் முதலில் பிலிம்பேர் விருதில் முன்மொழியப்பட்டார்.
2006- ஆம் ஆண்டில் வெளிவந்த இவருடைய முதல் திரைப்படமான, கபி அல்விதா நா கெஹ்னா , அந்த வருடத்தில் வெளிவந்த இந்திய திரைப்படங்களிலேயே அதிக வருவாய் ஈட்டிய படமாக அமைந்தது.[4] மணிரத்தினத்தின் மேடைக் காட்சிகளான நேற்று, இன்று, நாளை -யில் மற்ற பல தோழமை நடிகர்களோடு இவரும் ஒருவராக இருந்திருக்கிறார்.பச்சனுடைய அவ்வருடத்தின் இரண்டாவது படமான உம்ராவ் ஜான் வியாபார ரீதியாக தோல்வியைத் தழுவியது, ஆனால் இவருடைய அந்த வருடத்தின் மூன்றாவது திரைப்படமான, தூம்- 2, முதல் தூம்-ன் பின்தொடர்ச்சியாக வந்த இது நல்ல வசூல் ஈட்டியது,எனினும் முதல் தூம் போலவே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஹிருத்திக் ரோஷன் அவர்களுக்கே விமர்சகர்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது.
2007-ஆம் ஆண்டில், பச்சன் குரு -வில் நடித்தது, இவருடைய நடிப்புத் திறனுக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது, மற்றும் இந்தத் திரைப்படம் இவருடைய தனிப்பட்ட வெற்றியை வெளிப்படுத்தியது. 2007-ஆம் ஆண்டு மே-ல் வெளிவந்து வெற்றி பெற்ற சூட் அவுட் அட் லோகன்ட்வாலா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஜூன் 2007-ஆம் ஆண்டில் வெளிவந்த இவருடைய அடுத்த படமான ஜூம் பராபர் ஜூம் , இந்தியாவில் தோல்வியைத் தழுவியது ஆனால் வெளிநாட்டில் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் நன்றாக ஓடியது.அதேவேளையில் இந்தப் படம் ஒரு கலப்பு விமர்சனத்தைப் பெற்றது, பச்சன் இவருடைய நடிப்புத் திறமைக்காக பாராட்டைப் பெற்றார்.
2008 ஆம் ஆண்டுக் கோடைக்காலத்தில், பச்சன், இவருடைய மனைவி, தகப்பனார் மற்றும் தோழமை நடிகர்களான ப்ரீத்தி ஜிந்தா, ரிதேஷ் தேஷ்முக், மற்றும் மாதுரி தீட்சித் ஆகியவர்களுடன் நடத்திய உலகச் சுற்றுலா மேடை நிகழ்ச்சி மறக்கமுடியாததாகும்.அதில் முதல் சுற்று அமெரிக்கா, கனடா, டிரினிடாட் மற்றும் லண்டன், இங்கிலாந்து ஆகியவற்றை உட்கொண்டிருந்தது.
மேலும் பச்சன் தன்னுடைய தகப்பனாரின் ஏபிசிஎல் நிறுவனத்தில், செயலாக்கம் மற்றும் நிர்வாகச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார், பின்னர் ஏபிசிஎல் நிறுவனம் ஏ.பி.கார்ப்.லிட். ஆக மறுப்பெயரிடப்பட்டது. அந்த நிறுவனம் விஸ்கிராப்ட் இன்டர்நேஷனல் என்டேர்டைன்மென்ட் பிரைவேட் லிட். உடன் சேர்ந்து மறக்கமுடியாத திரைப்படங்களை தயாரித்தார்கள்.
2008 ல் வெளிவந்த பச்சன் படங்களில் சர்கார் ராஜ் மற்றும் தோஸ்தானா. ஆகியவையும் அடங்கும். தற்பொழுது அபிஷேக்கும், தயாரிப்பாளர்களாக மாறிய பாலிவுட் நடிகர்களின் பட்டியலில் பா என்கிற ஹிந்தி படத்தை தனது குடும்ப நிறுவனமான ஏ.பி.கார்ப்.லிட். காக தயாரித்ததின் மூலம் இணைந்துள்ளார். அபிஷேக் அத்திரைப்பட்டத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது மட்டுமில்லாமல், படத்தின் வரவு செலவு, சந்தை படுத்துவது, மற்றும் படத்தின் மொத்த தயாரிப்புகளிலும் பங்கு கொண்டார்.
அபிஷேக் தற்பொழுது கலர்ஸ் தொலைகாட்சியில், நேஷனல் பின்கோ நைட். என்கிற ஒரு புத்தம் புது விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், இது ஜனவரி 23,2010 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி கலர்ஸ் தொலைகாட்சியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நிகழ்வு முதலே, தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் மற்ற அனைத்து பிரபலமான தொலைக்காட்சி தொடர்களையும் பின்னுக்கு தள்ளியது. இதனால் இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வே டி.வீ.ஆர் படிநிலையில் 3.5-ஆகா உயர்ந்தது.பச்சன் 2010 -ல் வெளியான திரைப்படங்களில், ராவன் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் தமிழ் நடிகர் விக்ரம் உடன் நடித்துள்ளார்.
