Friday, January 17
Shadow

நடிகர் பகவதி பெருமாள் பிறந்த தின பதிவு

தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 2012 ஆவது ஆண்டில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் ஏற்ற பகவதி எனும் கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்து அறியப்படுகிறார். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014), நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் (2015), பிச்சைக்காரன் (2016) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எழுத்தாளர் சுஜாதாவிடம் திட்டு வாங்கிய பகவதி பெருமாள்:

”எம்.ஐ.டி. இன்ஜீனியரிங் கிராஜுவேட் சார் நான். சினிமா ஆசை இருந்தாலும் படிப்பு முடிஞ்சதும், ‘அடுத்து என்ன?’னு குழப்பமாவே இருந்துச்சு. எழுத்தாளர் சுஜாதா, காலேஜ்ல எனக்கு சூப்பரோ சூப்பர் சீனியர். அவருக்கு போன் பண்ணி, ‘சார் எனக்கு என்ன பண்றதுனு குழப்பமா இருக்கு. நீங்கதான் கைடு பண்ண ணும்’னு கேட்டப்ப, செம டோஸ் விட்டார். ‘நீ என்ன நினைச்சிட்டு இருக்க? கவர்மென்ட் உங்களுக்கு எவ்ளோ செலவு பண்ணுது? சினிமாவுக்குப் போறதுனா சினிமா சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வேண்டியதுதானே? எதுக்காக ஒரு இன்ஜீனியரிங் சீட்டை வேஸ்ட் பண்ணினே? அந்தச் சீட்ல வேற எவனாவது படிச்சிருப்பான்ல’னு செம பரேடு. டக்குனு ‘சாரி சார்’னு சொல்லிட்டு லைனை கட் பண்ணிட்டேன். ஆனா, அவர் பேசினது ரொம்ப நியாயமான விஷயம் என்றார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

சூப்பர் டீல்க்ஸ் பிச்சாண்டு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், ஜிகர்தண்டா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இன்று நேற்று நாளை, ஜில் ஜங் ஜக், பிச்சைக்காரன், இறைவி, சைத்தான் கா பச்சா, மாயவன்,