ஜெய்கணேஷ் அல்லது ஜெய் கணேஷ் ஒரு தமிழ்த்திரைப்பட நடிகர். முதன்மை, துணை, எதிர்மறை எனப் பலவாறான பாத்திரங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர். பொறியாளரான அவர் அவள் ஒரு தொடர்கதை, ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, அதிசயப் பிறவி முதலிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.
இயக்குனர் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், சுமித்ரா, ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், படாபட் ஜெயலக்சுமி, சத்யபிரியா, ஜெயமாலினி, அனுராதா, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராதிகா, ரேவதி, விஜய், அஜீத் குமார் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.
ஜெய்கணேஷ் பிப்ரவரி 11, 2001ல் தன் 54ம் அகவையில் புற்றுநோயால் இறந்தார்.
நடித்தத் திரைப்படங்கள் சில
அவள் ஒரு தொடர்கதை, அக்கா, மகராசி வாழ்க, மனமார வாழ்த்துங்கள், ஆட்டுக்கார அலமேலு, பட்டினப் பிரவேசம், வருவான் வடிவேலன், பைலட் பிரேம்நாத், வணக்கத்திற்குரிய காதலியே, வட்டத்துக்குள் சதுரம், சொன்னது நீதானா, அன்னலட்சுமி, தாயில்லாமல் நானில்லை, நீயா, அழகே உன்னை ஆராதிக்கிறேன், அன்பே சங்கீதா, சித்திரச்செவ்வானம், சுப்ரபாதம், மாம்பழத்து வண்டு, தேவைகள், பாப்பாத்தி, அப்போதே சொன்னேனே கேட்டியா, காளி கோயில் கபாலி, பட்டாகத்தி பைரவன், திரிசூலம், பருவத்தின் வாசலிலே, வேடனை தேடிய மான், கீதா ஒரு செண்பகப்பூ, ஒரே முத்தம், ஒரு மரத்து பறவைகள், முழு நிலவு, சொர்க்கத்தின் திறப்பு விழா, தாய் மூகாம்பிகை, காமன் பண்டிகை, என் ஆசை உன்னோடு தான், சின்ன வீடு, ஆகாயத் தாமரைகள், அண்ணி, நம்பினார் கெடுவதில்லை, பதில் சொல்வாள் பத்ரகாளி, எங்க சின்ன ராசா, தம்பி தங்கக் கம்பி, அண்ணாநகர் முதல் தெரு, உழைத்து வாழ வேண்டும், காளிச்சரண், குங்குமக்கோடு, சிகப்பு தாலி, கைநாட்டு, வானம், ராஜா சின்ன ரோஜா, தென்றல் சுடும், கைவீசம்மா கைவீசு, பெண்புத்தி முன்புத்தி, திராவிடன், அதிசயப் பிறவி, அரங்கேற்ற வேளை, கல்யாண ராசி, நாட்டுக்கு ஒரு நல்லவன், ஆயுள் கைதி, தங்கமான தங்கச்சி, மகராசன், துருவ நட்சத்திரம், முதல் பாடல், ராசா மகன், சீமான், நிலா, வீரமணி, உங்கள் அன்பு தங்கச்சி, முறைமாமன், வேலுசாமி, பூவே உனக்காக, உள்ளத்தை அள்ளித்தா,இனி எல்லாம் சுகமே, காத்திருந்த காதல், புதுமைப்பித்தன், மலபார் போலீஸ், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, நீ வருவாய் என, திருவண்ணாமலை, பிறந்த நாள், பார்த்தேன் ரசித்தேன், மகளிர்க்காக, மாயி

Related