Wednesday, October 28
Shadow

மறைந்த நடிகர் கலாபவன் மணி பிறந்த தினம்

கலாபவன் மணி தென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர்.

இவர் நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடியில் பிறந்தவர். மலையாள திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு மூவிருளி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்ற திரைப்படத்தில் நடித்ததிற்காக 2000ஆம் ஆண்டில் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

மறுமலர்ச்சி, வாஞ்சிநாதன், ஜெமினி, தென்னவன், ஜே ஜே, பந்தா பரமசிவம், தத்தித் தாவுது மனசு, புதிய கீதை, காதல் கிசுகிசு, ஏய், குத்து, போஸ், சிங்கார சென்னை, செம ரகளை, அந்நியன், செவ்வேல், ஆறு, ஜித்தன், மழை, பாசக்கிளிகள், உனக்கும் எனக்கும், வேல், மோதி விளையாடு, எந்திரன், யாருக்குத் தெரியும், சங்கராபுரம், கங்காரு, லவ் குரு, கலை வேந்தன், பாபநாசம்