Sunday, December 8
Shadow

முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்தவர் “ பறந்து செல்ல வா “ நாயகன் லூத்புதின் பாஷா !!

பறந்து செல்ல வா திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது. இப்படத்தில் நடிகர் , தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களின் மகன் லூத்புதின் பாஷா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜஷ் , நரேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் நாசரின் மகனான லூத்புதின் பாஷாவின் நடிப்பை அனைவரும் பெரிய அளவில் பாராட்டி உள்ளனர். மிக முக்கியமாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் பாஷாவின் நடிப்பை சென்ற வாரம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வைத்து புகழ்ந்து பேசினார்.

எல்லோரும் பாராட்டும் அளவுக்கு பாஷாவின் நடிப்பு பேசப்பட காரணம் அவர் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவருடைய தந்தையிடம் கூறியவுடன் பாஷாவை அவருடை தந்தை நடிப்பு பயிற்சி வகுப்புக்கு அனுப்பி நடிப்பை கற்று வர சொன்னார். இதன் மூலம் நடிப்பை ஆர்வமாக கற்று கொண்ட பாஷா தற்போது வெளியாகவுள்ள “ பறந்து செல்ல வா “ திரைப்படத்தில் சம்பத் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். எல்லோரிடமும் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Leave a Reply