Friday, September 11
Shadow

நடிகர் நெடுமுடி வேணு பிறந்த தின பதிவு

நெடுமுடி வேணு இந்தியாவின் கேரளாவைச் சார்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவரது இயற்பெயர் கே. வேணு கோபால் (K. Venu Gopal) ஆகும். நாடகத்தில் நடித்த பெயரான நெடுமுடி வேணு என்றே பெரும்பாலும் அறியப்படுகிறார். இவர் திரைக்கதையும் எழுதியுள்ளார் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் இவர் கேரளா மாநிலத்தின் ஆலப்புழையில் பிறந்தவர். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் கலாகெளமுதி பத்திரிகையில் பணியாற்றினார். இவரது பெற்றோர் பி. கே. கேசவன், பி. குஞ்ஞிக்குட்டியம்மா ஆவர். இவரது மனைவியின் பெயர் டி. ஆர். சுசீலா. இவருக்கு உன்னி கண்ணன் என இரு மகன்கள் உள்ளனர்.

இவர் நடித்த படங்கள்: சர்வம் தாளமயம், வால்டர், காஞ்சனா 3, சிலம்பாட்டம், பொய் சொல்ல போறோம், அந்நியன், இந்தியன்