Thursday, October 29
Shadow

தெலுங்கு நடிகர் ராஜசேகர் பிறந்த தினம்

ராஜசேகர் இந்தியத் திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகராவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் நன்கு அறியப்படுபவராக இருக்கிறார். சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எண்ணற்ற மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகராக உள்ளார். மனோகரன் இயக்கத்தில் வெளிவந்த நண்டு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதுதாண்டா போலீஸ், எவன்டா உங்க எம்.எல்.ஏ போன்ற அதிரிபுதிரியான டப்பிங் படங்கள் மூலம் தமிழ் திரையுலகை ஒரு காலத்தில் கத்திக் குத்திக் கிழித்த டாக்டர் ராஜசேகர் தற்போது புது பிசினஸில் குதித்துள்ளார்- தனது மனைவியுடன்.
டாக்டர் ராஜசேகரும், மனைவி நடிகை ஜீவிதாவும் இணைந்து நீண்ட காலமாக தெலுங்குத் திரையுலகில் முக்கியத் தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
அதிரடி ஆவேசப் படங்களுக்குப் பெயர் போனவர் ராஜசேகர். அவரது படங்களுக்கு தமிழ்நாட்டிலும் நல்ல டிமாண்ட் இருந்தது ஒரு காலத்தில்.
பாரதிராஜாவின் கையால் தமிழில் நடிகராக அறிமுகமானவர் டாக்டராக இருந்த ராஜசேகர். தமிழில் அவருக்கு நல்ல எதிர்காலம் இல்லை. எனவே தெலுங்குக்குத் தாவினார். அங்கு அவர் நடித்த படம் தமிழில் இதுதாண்டா போலீஸ் என்ற பெயரில் அறிமுகமாகி ராஜசேகரை ஒரு ரணகளமான அதிரடி நாயகனாக தமிழிகத்தில் அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து எவனா இருந்தா எனக்கென்ன, எவன்டா உங்க எம்.எல்.ஏ என்று ஏக வசனத்தில் வைக்கப்பட் டைட்டில்களும், ஏகப்பட்ட வசனமும், எக்குத்தப்பான அடிகளையும் கொண்ட படங்கள் மூலம் ராஜசேகர் தமிழ்நாட்டைஒருகலக்கு கலக்கினார்.
இந்த நிலையில் தற்போது டாக்டர் ராஜேசகரும், அவரது மனைவியும் இணைந்து ஹைதராபாத்தில் ஒரு ஜவுளிக் கடை தொடங்கியுள்ளனராம். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இந்தக்கடை அமைந்துள்ளது.