Tuesday, February 11
Shadow

நடிகர் ராம்கி பிறந்த தின பதிவு

ராம்கி ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நிலவே முகம் காட்டு, பாளையத்து அம்மன் ஸ்ரீ ராஜராஜேசுவரி, படைவீட்டு அம்மன், குற்றப்பத்திரிக்கை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நிரோசா என்ற நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல படங்களில் இணைந்தே நடித்தனர். ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த ராம்கி பெரிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சினிமாவுக்கு வருகிறார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய பெரும் இமயங்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவாக ஆரம்பித்த நேரத்தில் சின்னப் பூவே மெல்லப் பேசு படம் மூலம் ஹீரோவாக வந்தவர் ராம்கி. அதன் பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்தார்.  பெரிய ஹீரோவாகாவிட்டாலும் கூட பிசியான ஹீரோவாகவே இருந்தவர் ராம்கி. காலப் போக்கில் ஏகப்பட்ட இளம் ஹீரோக்கள் குவியத் தொடங்கியதால் ராம்கிக்கு வாய்ப்புகள் குறைந்தன.
பிசியாக இருந்த காலத்திலேயே நிரோஷாவைக் காதலித்து சத்தம் போடாமல் மணந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார் ராம்கி. ஊரறிய அறிவித்து, உலகறிய பிரமாண்டமாக கல்யாணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் சட்டென்று பிரிந்து போவது பேஷனாக உள்ள இந்தக் காலத்தில், படு சமர்த்தாக, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் ராம்கி-நிரோஷாவை பாராட்டாமல் இருக்க முடியாது.  சமீப காலமாக ராம்கியை எங்குமே பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில் மறுபடியும் வருகிறார் ராம்கி. இந்த முறை இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
இவர் நடித்த படங்கள்:  வேட்டை நாய், ஆங்கில படம், வாய்மை, அட்டி, பிரியாணி, மாசாணி, பூவெல்லாம் கேட்டுப்பார்