Monday, June 17
Shadow

Tag: #birthday

நடிகை பூமிகா சாவ்லா பிறந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
பூமிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: கொலையுதிர் காலம், யூ டர்ன், களவாடிய பொழுதுகள், M.S. தோனி : The Untold Story, சில்லுனு ஒரு காதல், பத்ரி...

நடிகர் விஜய் வசந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஜய் வசந்த் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் புகழ்பெற்ற வணிக நிறுவனமான வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். விஜய் வசந்த் மே 20, 1983 சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை எச். வசந்தகுமார் .இவர் வசந்த்& கோவின் நிறுவனத் தலைவர் ஆவார். மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு நாங்குநேரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். இவரின் தந்தை எச். வசந்தகுமார், வசந்த்& கோ எனும் நிறுவனத்தை 1978 ஆம் ஆண்டில் துவங்கினார். தற்போது இந்த நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 71 கிளைகள் கொண்டுள்ளன. இந்த நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது...

இயக்குனர் பாலு மகேந்திரா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பாலு மகேந்திரா இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர். 1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 ல் தங்கப்பதக்கம் பெற்றார். தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்(Bridge of r...

நடிகர் அதர்வா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார். அதர்வா தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே 7 அன்று இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள். 2009இல் பத்ரி வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய, பாணா காத்தாடி படத்தில் கதாநாயகன் வேடம் அதர்வாவிற்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகை சமந்தாவுடன் அதர்வா நடித்தார். இவர் நடித்துள்ள படங்கள்: ஒத்தைக்கு ஒத்த, 100, குருதி ஆட்டம், பூமராங், செம போத ஆகாத, இமைக்கா நொடிகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கணிதன், ஈட்டி, சண்டி வீரன், இரும்பு குதிரை, பரதேசி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பாணா காத்தாடி...
பட்டிமன்றம் ராஜா பிறந்த தின பதிவு

பட்டிமன்றம் ராஜா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். ராஜா  அல்லது பட்டிமன்றம் ராஜா, என்பவர் தமிழ்நாடு மாநிலம், மதுரையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர், நகைச்சுவை மற்றும் பட்டிமன்றப் பேச்சாளராவார். சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை ஒளிபரப்பப்படும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். சிவாஜி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் மதுரை யுணைட்டட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் நடித்த படங்கள்: சிவாஜி, குரு என் ஆளு, குரு சிஷ்யன், மாப்பிள்ளை, கோ, மயிலு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பட்டத்து யானை, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ...
நடிகர் சுமன் செட்டி பிறந்த தின பதிவு

நடிகர் சுமன் செட்டி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுமன் செட்டி  இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் உருவ அமைப்பில், முன்னணி தமிழ் நகைச்சுவை நடிகரான செந்திலைப் போல அறியப்படுகிறார். சுமன், ஆந்திராவின் மிர்யாலகுடாவை சேர்ந்தவர். இவரது ஏற்ற இறக்கங்களுடனான வசன உச்சரிப்புகளும், முக பாவனைகளும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. தற்போது தனது குடும்பத்தினருடன் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். ...

நடிகர் அஜித் குமார் பிறந்த தின பதிவு அவரின் அறிய புகைப்படங்கள் உள்ளே

Latest News, Top Highlights
அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை "அல்டிமேட் ஸ்டார்"என்றும் "தல" என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.[3] மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார். அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[5...
நடிகை லேகா வாசிங்டன் பிறந்த தின பதிவு

நடிகை லேகா வாசிங்டன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
லேகா வாசிங்டன் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கும் திரைப்பட நடிகையும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஜெயம் கொண்டான், வேதம், வ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: கல்யாண சமையல் சாதம், வ குவாட்டர் கட்டிங், ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே ...
திரைப்பட இயக்குனர் கே. வி. ஆனந்த் பிறந்த தின பதிவு

திரைப்பட இயக்குனர் கே. வி. ஆனந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கே. வி. ஆனந்த் ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் பணியாற்றினார். அப்போது தனது நுட்பமான ஒளிப்பதிவு திறமைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டப்பட்டார். இவர் இயக்கிய படங்கள் : காப்பான், கவண், அனேகன், மாற்றான், கோ, அயன், சிவாஜி : தி பாஸ், மீரா ...
நடிகை நந்திதா பிறந்த தின பதிவு

நடிகை நந்திதா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
நந்திதா என்பவர் ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.  எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.  நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த படங்கள்: ஐபிசி 376, 7 - செவேன், இடம் பொருள் ஏவல், வணங்காமுடி, தேவி 2, கலகலப்பு 2, அசுரவதம், நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து, அஞ்சல, உப்பு கருவாடு, முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், அட்டகத்தி ...