Wednesday, April 22
Shadow

ஹிந்தி நடிகர் ரிசி கபூர் பிறந்த தினம் இன்று

ஒரு இந்திய பாலிவுட் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர். மும்பையில் பிறந்த கபூர், பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான ராஜ் கபூரின் இரண்டாவது மகன்.

அவருடைய சகோதரர்களும் புகழ்பெற்ற நடிகர்களாவார்கள்: ரந்திர் கபூர் மற்றும் ராஜீவ் கபூர். இவர் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையாவார். இன்றைய நடிகைகளான கரீஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூர் ஆகியோரின் தந்தையின் சகோதரராவார் ரிஷி. அவர் பஞ்சாப் இந்து காத்ரி சமூகத்தைச் சார்ந்தவர்.

ரிஷி கபூர் முதல் முறையாக தன்னுடைய தந்தையின் 1970 ஆம் ஆண்டுத் திரைப்படமான மேரா நாம் ஜோக்கர் (என் பெயர் ஜோக்கர்), என்ற படத்தில் தன்னுடைய தந்தை சிறுவனாக வரும் கதாபாத்திரத்தில் தோன்றினார். ரிஷி கபூருக்கு முதல் கதாநாயகன் பாத்திரம் டிம்பிள் கபாடியாவுடன் 1973 ஆம் ஆண்டின் பிரபலத் திரைப்படமான பாபியில் துவங்கியது, இது இளைஞர்களிடம் உடனடி பிரபலத்தை ஏற்படுத்தியது. அதுமுதற்கொண்டு அவர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தோன்றியுள்ளார். தாமதமாக வெளியிடப்பட்ட கரோபார்: தி டிஸ்மிஸ் ஆஃப் லவ்வுடன் 2000 ஆம் ஆண்டு வரை இளம் நடிகைகளைக் காதலிக்கும் கதாநாயகனாக நடித்து வந்தார். ஹம் தும் (2004) மற்றும் ஃபானா (2006) திரைப்படத்துடன் அவர் துணை கதாபத்திரங்களுக்கு மாறிவிட்டார். அவர் 1998 ஆம் ஆண்டில் ஆ அப் லௌட் சலேன் என்ற திரைப்படத்தையும் இயக்கினார், இதில் ராஜேஷ் கன்னா, ஐஸ்வர்யா ராய், அக்ஷய் கன்னா, காதர் கான், பரேஷ் ராவல் மற்றும் ஜஸ்பல் பாட்டி ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில் அவர் தோன்றியது நமஸ்தே லண்டன் மற்றும் ஒரு ஆங்கில மொழித் திரைப்படமான டோண்ட் ஸ்டாப் ட்ரீமிங் , இது அவருடைய சகோதரர் (ரிஷியின் சிற்றப்பா ஷம்மி கபூர் மகன்) ஆதித்யா ராஜ் கபூர் அவர்களால் இயக்கப்பட்டது. இவர் மிகவும் திறமைவாய்ந்த நடிகர் கமல்ஹாசனுடன் சாகர் என்ற திரைப்படத்தில் நடித்தார், இந்தத் திரைப்படம் அதிகாரபூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

அவர் ‘சிண்டு ஜி’ என்ற திரைப்படத்தில் ரிஷி கபூராகவே நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் அவருடைய தந்தை ராஜ் கபூர், தாய், மனைவி மற்றும் அவருடைய முந்தைய படங்களான சாந்தினி, மேரா நாம் ஜோக்கர் மற்றும் இதரவை தொடர்பான குறிப்புகளைக் கொண்டிருக்கிறது.

ரிஷியுடன் பல வெற்றிப் படங்களில் நடித்த நீத்து சிங் உடன் ஏப்ரல் 13, 1979 அன்று நிச்சயம் செய்யப்பட்டு, 1980 ஆம் ஆண்டில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் நீத்து சிங் நடிப்பதை நிறுத்தி விட்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்: ரன்பிர் கபூர், இவரும் ஒரு நடிகர் மற்றும் ரிதிமா கபூர். இவர்களில் ரன்பீர் கபூர் தற்போது கதாநாயகனாகி விட்டார். சாவரியான் என்ற படத்தில் துவங்கிய இவரது திரை வாழ்க்கை அஜப் பிரேம் கி கஜப் கஹானி போன்ற படங்களின் வழி தொடர்கிறது. தற்போதுள்ள முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக ரன்பீர் திகழ்கிறார்.