
அமெரிக்கத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் மேடைச் சிரிப்புரைஞராவார். சிகாகோவில் பிறந்த இவர் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் நகரங்களில் 1970 ஆம் ஆண்டு கலகட்டங்களில் மேடைச் சிரிப்புரைஞராக இருந்தார். மோர்க் அண்ட் மைன்டி எனும் சூழ்நிலைக்கேற்ற நகைச்சுவை செய்யும் ஒரு நிகழ்ச்சியில் மோர்க் எனும் வேற்றுலக உயிரியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்பு மேடைச் சிரிப்புரைஞராகவும், துரைப்படங்களிலும் நடித்தார். இவரின் முன்னேற்பாடின்றித் திடிரென்று செய்யும் திறனால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.

1980 இல் வெளிவந்த பாபேய் எனும் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். வில்லியம் திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களிலும், துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்மார்னிங் வியட்நாம் (காலை வணக்கம் வியட்நாம் (1987) டெட் போயட்ஸ் சொசைட்டி(1989), வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் அலாவுதீன் திரைப்படம் (1992) 1997 இல் குட் வில் ஹன்டிங் ஆகிய திரைப்படங்களில் முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்தார். மேலும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் 1991 இல் வெளிவந்த ஹுக், ஜோ ஜான்ஸ்டன் இயக்கிய ஜுமாஞ்சி (1995), மற்றும் 2006 இல் ஷான் லீவி இயக்கிய நைட் அட தெ மியூசியம் போன்ற அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1997-ல் வெளிவந்த ‘குட் வில் ஹண்டிங்’ படத்தின் நடிப்புக்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றார் . இரு முறை எம்மி விருதும், ஏழு முறை கோல்டன் குளோப் விருதும், நான்கும் முறை கிராமி விருது பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுக்கு மூன்றுமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார் .அவர் நடித்த மிஸஸ் டவுட்ஃபயர்’ தமிழில் அவ்வை சண்முகியாகவும், ‘பாட்ச் ஆடம்ஸ்’ படம் தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஹிந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்றும் வெளிவந்தன .
ஆகஸ்டு 11, 2014 இல் தனது 63 ஆவது வயதில் கலிபோர்னியா , பாரடைசு கேயில் உள்ள தனது வீட்டில் தற்கொலைசெய்துகொண்டார்.
