Thursday, September 10
Shadow

நடிகர் தியாகராஜன் பிறந்த தின பதிவு

தியாகராஜன் தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகருமாவார். இவர் நடிகர் பிரசாந்தின் தந்தையாவார். 1981-ம் ஆண்டு நடிகராக அறிமுகமாகி, 1990-ம் ஆண்டு முதல் தயரிப்பாளராகவும், 2004-ம் ஆண்டு முதல் இயக்குனராகவும் திரையுலகில் பணியாற்றி வருகின்றார்.

பாரதிராஜாவால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். நாயகனாக நடித்துக் கொண்டிருந்த போதே லட்சுமி சாந்தி மூவீஸ் சார்பில் படம் தயாரித்தும் இயக்கியும் வந்தார். இவர் இயக்கியவை பெரும்பாலும் வெற்றிப் படங்களே.

மகன் பிரசாந்த் நடிக்க வந்ததும், நடிப்பிலிருந்து முழுமையாக ஒதுங்கி, தயாரிப்பாளர் – இயக்குநராக மட்டும் இருந்து வந்தார்.

விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவான  எமன் படத்தில் தியாகராஜன் வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார்.

 

இவர் இயக்கிய படங்கள்:  இருபத்தியாறு 26, மம்பட்டியான்

இவர் நடித்த படங்கள்: ஒத்தைக்கு ஒத்த, செக்கச்சிவந்த வானம், எமன், வாய்மை, துரோகி

இவர் தயாரித்த படங்கள்: ஜானி, சாகசம்