

விஜய் என்றால் வெற்றி சாதனை என்று தான் சொல்லணும் ஒவ்வொரு முறையும் தன் வெற்றி பங்கை உயர்த்திக்கொண்டே போகிறார் என்று சொன்னால் மிகையாகது ஆம் படத்துக்கு படம் வெற்றி அதோடு ஒவ்வொரு புதிய சாதனைகளும் புரிந்துகொண்டேபோகிறார்.அந்த வகையில் இந்த தீபாவளிக்கு வெளியான பிகில் மூலம் தெனிந்திய சூப்பர்ஸ்டாராக மாறிய தளபதி விஜய் என்று தான் சொல்லணும்.
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்குத்தான் தென்னிந்திய அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. இருவருமே தமிழைத் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு அடுத்து தற்போது தமிழில் முன்னணியில் உள்ள ஹீரோக்களில் முக்கியமானவர்கள் விஜய், அஜித். இவர்களில் விஜய் தமிழைத் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை. அஜித் ‘பிரேம புஸ்தகம்’ என்ற ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.
இருந்தாலும் தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டைத் தவிர கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விஜய் படத்தின் வசூல், அஜித் படத்தின் வசூலைவிட மிக அதிகமாகவே இருக்கும்.
தெலுங்கு பேசும் மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விஜய், அஜித் இருவருக்குமே சுமாரான வசூல் கூட இல்லாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த ‘பிகில்’ படம் தமிழ்நாட்டில் சறுக்கினாலும் தெலுங்கில் லாபத்தைக் கொடுத்து விஜய்க்கு அங்கும் ஒரு மார்க்கெட் ஓபன் ஆகி இருக்கிறது. இதன் மூலம் அஜித்தை முந்திக் கொண்டு தென்னிந்திய ஸ்டார் ஆக தற்போது மாறியிருக்கிறார் விஜய்.
கேரளாவில் மலையாள நடிகர்களின் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை விட விஜய் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அது, இனி தெலுங்கு மாநிலங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
