

தமிழ் சினிமாவில் குறுகியகாலத்தில் ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் என்றால் அது விஜய் சேதுபதி இவரின் நடிப்பாற்றல் பார்த்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் முதல் வியப்படைந்தவர்கள் உண்டு இவரின் நடிப்பு திறமையால் இவருக்கு என்று மிக பெரிய ரசிகர் பட்டாளாம் இவருக்கு உண்டு .
நான் இப்படி தான் நடிப்பேன் என்ற கோட்பாடை உடைத்து எனக்கு கதாபாத்திரம் பிடித்தல் நடிப்பேன் என்று வெற்றி கண்ட ஒரே நடிகர் வில்லன் ஹீரோ குணசித்திரம் இப்படி தமிழ் மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளில் கொடிகட்டி திகழும் நடிகர் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது.
இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டிகள் தவிர பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு போட்டியும் நடத்தப்படுகிறது விஜய் சேதுபதியை எதனால் பிடிக்கும் என்று சிறப்பாகச் சொல்லும் 41 பெண்களுக்கு தலா 1,000 வீதம் பரிசு அளிக்கப் படுகிறது.
இந்த போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 30, 2019.
இந்தப் போட்டிகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு திரைப்படம் டாட் இன் என்ற இணைய தளத்தை சொடுக்கவும்.
