Monday, July 6
Shadow

நான் அவளை சந்தித்த போது – திரைவிமர்சனம்

<img
ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதை தான் இந்த நான் அவளை சந்தித்த போது சினிமாவின் போராட்டத்துடன் நிஜ வாழ்க்ககையின் போராட்டம் தான் இந்த படம். முற்றிலும் வித்தியாசமான ஒரு காதல் படம் என்றும் சொல்லலாம்

படம் ஆரம்பிக்கும் போது இயக்குநரின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த கதை இது என்று பேக்ரவுண்டில் நாயகன் சொல்கிறார். சோகமாகத்தான் இருக்கிறது. வழி சொல்லப்போய் வாழ்க்கையில் ஒரு சுகமான சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரவீந்தர்.

“1996 ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிய கதை. சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றும் ஹீரோ, வழக்கமாக வாய்ப்பு தேடி போகும் போது வழியில் இளம்பெண் ( நாயகியை ) ஒருவரை சந்திக்கிறான். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் அட்ரஸை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஹீரோ அவரை காப்பாற்றி அவளின் ஊர்வரை கொண்டு போய் விட போகிறான். போன இடத்தில் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது. நாயகன், நாயகி என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.

1996 ஆம் ஆண்டு நிகழ்ந்த கதை என்பதால் முடிந்தவரை செட் பிராப்பர்ட்டிஸ்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் , நாயகனின் வீட்டில் இயக்குநர் விக்ரமனின் படம் ,அந்தக்கால பொம்மை சினிமா இதழ்களில் வெளியான சிவாஜி கணேசனின் அட்டைப்படம்.இப்படி…சில பல அடையாளங்கள். படத்தில் ஊடுபாவாக உதவி இயக்குநர்களின் பரிதாபநிலை ஆங்காங்கே. ஆனால் அவை காமடிக்காக பயன்பட்டிருக்கிறது. இவ்வளவு வறுமையிலா வாடுகிறார்கள் உதவி இயக்குநர்கள் என்கிற ஐயம் வெளியுலகத்தினருக்கு வரும். ஆனால் அதுதான் உண்மை.

இதில் சந்தோஷ்பிரதாப்( மூர்த்தி), ஒரு உதவி இயக்குனராக உணர்வு பூர்வமாக நடித்துள்ளார்.

சாந்தினி (குமாரி) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இன்னும் அழுத்தமான வேடங்கள் கிடைத்தால் செய்யக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை.

மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர் இன்னசன்ட் இப்படத்தில் ஒரு ப்ளூ பிலிம் புரொட்யூசராக நடித்திருக்கிறார். கேரளத்தின் பெரிய ஆள். அரசியல்வாதியும் கூட. அசால்ட்டாக இம்மாதிரியான கேரக்டரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். எவர்கிரீன் ஆர்ட்டிஸ்ட் நாகேஷ் மாமா கேரக்டரில் அந்த காலத்தில் நடித்ததில்லையா?

பருத்திவீரன் சுஜாதா (சாந்தினி அம்மா), கோவிந்த மூர்த்தி (உதவி இயக்குனர்), சாம்ஸ் (உதவி இயக்குனர்) , டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா அனைவருமே கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- ஆர்.எஸ்.செல்வா காலத்து சூழலை காட்டியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்டர் ஜெய்காந்த் செட் பிராப்பர்ட்டிஸ்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

இசை-ஹித்தேஷ் முருகவேல் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அனைத்து மொழி சினிமாவிலும் கதை திருட்டு என்பது அடிக்கடி நடக்கும் விவகாரம். வழக்கமாக கதையை திருடுவாங்க, இல்லையேல் சீனை திருடுவாங்க ஆனால் இப்படி
பின்னணி இசையை திருடி, பிரபல தொலைக்காட்சியின் சீரியலுக்கு பயன்படுத்தியது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம் – எல்..ஜி.ரவிசந்தர். தன் வாழ்க்கையில் நடந்த உண்மைக் சம்பவத்தை அப்படியே வில்லன் இல்லாத திரைக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர். உதவி இயக்குனர் முதல் இயக்குனர் ஆனது வரை, அதற்காக மனைவி செய்த உதவிகள், தாயிடம் காட்டும் பாசம், வறுமையில் கஷ்டப்படும் போது எடுக்கும் முடிவு, அதன் பின் தாயின் அன்பிற்கு காணிக்கையாக க்ளைமாக்சில் கண் கலங்க வைத்துவிடுகிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர்.

மொத்தத்தில் சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் நான் அவளை சந்தித்த போது அனைவரையும் கவரும்.