
தமிழ் சினிமாத்துறையில் இயக்குநராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து முடித்ததும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இணைந்தார் விஷால் . ஆனால் எதிர்பாராத விதமாக நடிகரானார். அவருடைய முதல் படம் செல்லமே மிக பெரிய வெற்றிப்படமாக அமைய அவர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த அக்சன் ஹீரோவாக வளம் வந்தார்.
இருந்தும் அவரின் இயக்குனர் கனவு அடிக்கடி அவரை எட்டி பார்த்து செல்லும் இதனால் பல வருடங்களாக இருந்த அவரின் இயக்குனர் முரசி விரைவில் நினைவாக இருக்கிறது ஆம் விஷால் மிக விரைவில் ஒரு படத்தை இயக்க திட்டம்தீட்டி இருக்கிறார்

இயக்குநராக அறிமுகமாகும் விஷாலின் முதல் படம் முற்றிலும் விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்படும் அதே வேளையில், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராகவும் அமையும். விலங்குகளை மையமாக வைத்து, மொழிகளைக் கடந்து பல நாடுகளில் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களின் வரிசையில் இந்த படமும் இருக்கும்.
இப்படம் கதாநாயகன் அவர் கூட ஒரு விலங்கு என்றில்லாமல், முழுக்க முழுக்க விலங்குகளை குறிப்பாக ‘தெரு நாய்களை’ வைத்து எடுக்கப்படும் படமாக இருக்கும். அதில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். அவர் யார்? என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

விஷால் நிஜ வாழ்விலும் விலங்குகளை நேசிப்பவர். பல முறை விலங்குகள் நலத்திற்காக விலங்குகளை சுட்டு கொல்வது மற்றும் கால்நடைகளை கொல்வதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். நீண்ட காலமாக விஷால் யோசித்து வைத்த கதை இப்போது இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது. இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்படும்.
இது ஒருபுறம் இருக்க, விஷால் தற்போது நடித்து வரும் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
