விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க போகும் விஷால்
தமிழ் சினிமாத்துறையில் இயக்குநராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து முடித்ததும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இணைந்தார் விஷால் . ஆனால் எதிர்பாராத விதமாக நடிகரானார். அவருடைய முதல் படம் செல்லமே மிக பெரிய வெற்றிப்படமாக அமைய அவர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த அக்சன் ஹீரோவாக வளம் வந்தார்.
இருந்தும் அவரின் இயக்குனர் கனவு அடிக்கடி அவரை எட்டி பார்த்து செல்லும் இதனால் பல வருடங்களாக இருந்த அவரின் இயக்குனர் முரசி விரைவில் நினைவாக இருக்கிறது ஆம் விஷால் மிக விரைவில் ஒரு படத்தை இயக்க திட்டம்தீட்டி இருக்கிறார்
இயக்குநராக அறிமுகமாகும் விஷாலின் முதல் படம் முற்றிலும் விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்படும் அதே வேளையில், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராகவும் அமையும். விலங்குகளை மையமாக வைத்து, மொழிகளைக் கடந்து பல நாடுகளில் வெற்றி பெற்ற ஹாலிவு...
