Thursday, April 25
Shadow

ரஜினி மகள் சௌந்தர்யாவை புகழும் நடிகர் விவேக்

ரஜினிகாந்த இளைய மகள் இயக்கத்தில் தற்போது உருவாகும் படம் வேலையில்லா பட்டதாரி -2 படபிடிப்பு செமேப காலமாக நடந்து கொண்டு இருக்கு இந்த படத்தில் தனுஷ் விவேக் அமலாபால் காஜல் சமுத்திரகனி மற்றும் பலர் நடிப்பில் படு வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.

இத படத்தின் பட பிடிப்பில் கலந்து கொள்ளவது மிகவும் மன நிறைவாக உள்ளது என்று சமீபத்தில் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் . இதை தொடர்ந்து இப்ப படத்தின் இயக்குனரை நடிகர் விவேக் புகழ்ந்துள்ளார்.

நடிகர் விவேக் என்றாலே அங்கு நகைச்சுவைக்கும், கருத்துக்கும் பஞ்சம் இருக்காது, இவர் லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை பற்றி நகைச்சுவை கலந்து கருத்து கூறுவதால் இவரை சிலர் ‘சின்னக் கலைவாணர்’ என்றும் ‘சனங்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியோடு அழைப்பதுண்டு.

தொடர்ந்து நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த விவேக் தற்போது குனச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது விஐபி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார், ஏற்கனவே விஐபி முதல் பாகத்தில் இவர் நகைச்சுவை கலந்த குனச்சித்திர வேடத்தில் நடித்தது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, குறிப்பாக விவேக்கும், செல் முருகனும் இணைந்து கலக்கும் தங்க புஷ்பம் காமெடி எவர் கிரீன் ஹிட்.
இதனிடையே இன்று விவேக் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் விஐபி – 2 வின் இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் பற்றி கூறியதாவது:-
vivek
விஐபி – 2 படத்தின் படப்பிடிப்பு அருமையாக நடந்து கொண்டிருக்கிறது, மிகவும் சந்தோஷம், இங்கு நான் ஒருவரை பற்றி பேச போகிறேன், பயங்கர சுறு சுறுப்பாக உள்ளார், படப்பிடிப்பு தளத்தின் மொத்த டெம்போவும் அவர் கையில் வைத்துள்ளார், அதானே புலிக்கு பிறந்தது பூனையாகிவிடுமா, தலைவரின் பொண்ணுதானே அப்படி தானே இருப்பாங்க” என்று படத்தின் இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

Leave a Reply