Wednesday, June 24
Shadow

நடிகை அபிராமி பிறந்த தினம் பதிவு

கேரளாவை சேர்ந்த இவர் இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி, 36 வயதினிலே

இவர் பின்னணி குரல் கொடுத்த படங்ககள்

2013ல் வெளியான விஸ்வருபம் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு

2015ல் வெளியான உத்தம வில்லன் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு