
அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார். மேலும் நடிப்புத்திறன் தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்
.
இவர் நடித்த திரைப்படங்கள்
லிசா, காண்பது பொய், நாடோடிகள் 2, பேரன்பு, மத கஜ ராஜா, தரமணி, பலூன், இறைவி, மாப்ள சிங்கம், சகலகலா வல்லவன் அப்பாடக்கர், வத்திகுச்சி, கலகலப்பு, அரவான், தம்பி வெட்டோத்தி சுந்தரம், எங்கேயும் எப்போதும் , மங்காத்தா, அங்காடித் தெரு, ஆயுதம் செய்வோம், கற்றது தமிழ், சேட்டை
