Tuesday, October 27
Shadow

நடிகை அஞ்சலி பிறந்த தினம் அவரை பற்றி நீங்கள் அறியாத விஷயம்

ஆந்திராவில் பிறந்த இவர் விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் கடந்த 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். கடந்த 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

இவர் கற்றது தமிழ் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்காகவும், அங்காடித் தெரு படத்திற்காக சிறந்த நடிகைக்காகவும், பிலிம்பேர் விருது வென்றுள்ளார். இவர் கற்றது தமிழ் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை பிரிவிலும், அங்காடித் தெரு படத்திற்காக சிறந்த நடிகை பிரிவிலும் விஜய் விருதுகளை வென்றுள்ளார். இதுமட்டுமின்றி அங்காடித் தெரு படத்தில் நடித்ததற்காகசிறந்த நடிகைக்கான விகடன் விருதையும் வென்றனர்.

இவர் நடித்த தமிழ் படங்கள்

கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, ரெட்டைசுழி, மகிழ்ச்சி, துங்கா நகரம், கருங்காலி, கோ, மங்காத்தா,எங்கேயும் எப்போதும், தம்பி வெட்தேத்தி சுந்தரம், மஹாராஜா, அரவான், கலகலப்பு, வத்திகுச்சி, சட்டை, சிங்கம் 2, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், எனக்கு வாய்த்த அடிமைகள், தரமணி, பாலுன், காளி, பேரன்பு, நாடோடிகள் 2, லிசா, கீதாஞ்சலி, 2, மதகஜ ராஜா