Wednesday, October 28
Shadow

நடிகை பாக்யஸ்ரீ பிறந்த தினம் 

பாக்யஸ்ரீ என்று அழைக்கப்படும் பாக்யஸ்ரீ பட்வர்தன் ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது தந்தையார் பம்பாய் மாகாணத்தில் உள்ள சங்கலி சமஸ்தானத்தின் முன்னாள் அரசர் ஆவார்.
மாப்பிள்ளை மனசு பூபோல படத்தில் நடித்த பாக்யஸ்ரீ, இந்தியில் மைனே பியார் கியா படத்தில் நடித்தார். இப்படம் 2 வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ஏராளமான படங்கள் தேடி வந்தபோதும் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டார். கடந்த 2009ம் ஆண்டு தேவா என்ற போஜ்புரி படத்தில் நடித்தவர் அதன்பிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.