Thursday, May 14
Shadow

நடிகை பாரதி பிறந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்

இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் விஷ்ணுவர்தனின் மனைவியும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில் கன்னட மொழித் திரைப்படங்களே அதிகமாகும்.

இந்தியாவின் கர்நாடகத்தில் பிறந்த இவர், புகழ்பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் விஷ்ணுவர்தனை 1975 பிப்ரவரி 27 அன்று பெங்களூரில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கீர்த்தி, சாந்தனா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் விஷ்ணுவர்தன் 2009 டிசம்பர் 30 அன்று காலமானார்.

இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

நாடோடி, சந்திரோதயம், எங்க பாப்பா, நம்ம வீட்டு லட்சுமி, தங்கத் தம்பி, தெய்வச் செயல், வாலிப விருந்து, நான் யார் தெரியுமா, உயர்ந்த மனிதன், நிமிர்ந்து நில், பூவும் பொட்டும், நான்கு கில்லாடிகள், தங்கச் சுரங்கம், நில் கவனி காதலி, சினேகிதி, அவளுக்கென்று ஒரு மனம், மீண்டும் வாழ்வேன், அண்ணமிட்ட கை, உனக்கும் எனக்கும், பொன்வண்டு, நீ வாழ வேண்டும்