Thursday, June 13
Shadow

நடிகை காஜல் அகர்வால் பிறந்த தினம் இவரை பற்றி சில வரிகள்

நடிகை காஜல் அகர்வால், இந்தித் திரைப்படமான “கியூன்..! ஹோ கயா நா” வில் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், கடந்த 2007ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன்பிறகு கடந்த 2008ஆம் ஆண்டு இவர் நடித்த “பழனி” என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு இவர் நடித்த “மகதீரா” மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு, பிருந்தாவனம், மிட்டர். பெருபெட்டு, பிசினஸ்மேன், சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். தனது அழகால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் நடித்த மெர்சல் படம் வசூலை குவித்தது தற்போது பாரிஸ் பாரிஸ், எம்.எல்.ஏ., உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் காஜல்.

இவர் நடித்த திரைப்படங்கள்

கியூன்! ஹோ கயா நா…, லக்‌ஷ்மி கல்யாணம், சந்தமாமா, பவ்ருடு, பழனி, ஆட்டாடிஸ்டா, சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, மஹதீரா, கணேஷ் ஜஸ்ட் கணேஷ், ஆர்யா 2, ஓம் சாந்தி, டார்லிங், நான் மகான் அல்ல, பிருந்தாவனம், மிஸ்டர். பர்பெக்ட், வீரா, சிங்கம், தாதா, பிஸ்னஸ் மேன், மாற்றான், பிரதர்சு, துப்பாக்கி, ஸ்பெஷல் சப்பீஸ், பாட்ஷா, யேவது, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி