
இவர், வடிவேலு நடித்த மனுநீதி படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி உள்ளார். இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக இவர் துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார். இவர் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.
தொடக்ககாலத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்தார். முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடித்தார்.
இவரது மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார்.
இவர் நடித்த படங்கள்
இருபத்தியாறு 26, அடங்காதே, வீரா, ஜெயிக்கிற குதிர, சாட்டை 2, கோடிட்ட இடங்களை நிரப்புக, டோரா,
அசுரகுலம், விவேகம், வனமகன், விழித்திரு, தொண்டன், வேலைக்காரன், இரு முகன், பேய்கள் ஜாக்கிரதை, தொடரி, கடவுள் இருக்கான் குமாரு, விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ,வெற்றிவேல், அழகு குட்டி செல்லம், சாகசம், அப்பா,
சிவப்பு, யட்சன், வஜ்ரம், ஸ்ட்ராபெரி, இசை, கொம்பன், சேர்ந்து போலாமா, சண்டமாருதம், புலி, மாங்கா, இனிமே இப்படித்தான், கங்காரு, வீரம், ஜில்லா, புலிவால், நிமிர்ந்து நில், காடு, காவியத்தலைவன், யான், கதை திரைக்கதை இயக்கம், வானவராயன் வல்லவரையன், உன் சமையலறையில், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, நேரம், மூன்று பேர் மூன்று காதல், நீர்ப்பறவை, சாட்டை, கழுகு,
அம்புலி, வேட்டை, கும்கி, ஒஸ்தி, ராஜபாட்டை, வாகை சூட வா, மந்திர புன்னகை, மைனா, குரு என் ஆளு, இந்திரலோகத்தில் நா அழகப்பன், ரெண்டு, சில்லுனு ஒரு காதல், ஆறு.
இவர் கடந்த 2014ல் வெளியான “உ” படத்தில் பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இயக்கிய படங்கள்
கடந்த 2000ம் ஆண்டில் நடிகர் முரளி, பிரத்யுஸா நடிப்பில் வெளியான மனுநீதி, கடந்த 2008ல் நடிகர் வடிவேலு, யாமினி சர்மா நடிப்பில் வெளியான இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ஆகிய படங்கள்
