Wednesday, October 28
Shadow

நடிகை கௌசல்யா பிறந்த தினம்

கௌசல்யா தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த, ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஏறத்தாழ முப்பது தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூரில் பிறந்தவர்.

கௌசல்யா, 1996 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ஏப்ரல் 19 ல் பாலச்சந்திர மேனன் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டார். அடுத்த ஆண்டு, அவர் தனது முதல் தமிழ் படம் காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தில் நடித்தார். பல வெற்றிகரமான தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பூவேலி திரைபடத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். முன்னணி பாத்திரங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், சொல்லாமலே, பிரியமுடன், ஜாலி, பூவேலி, உன்னுடன், ஆசையில் ஒரு கடிதம், வானத்தைப் போல், ஏழையின் சிரிப்பில், தை பொறந்தாச்சு, ராஜ காளியம்மன், சந்தித்த வேளை, ஜேம்சு பாண்டு, குபேரன், இளையவன், மனதைத் திருடிவிட்டாய், குங்குமப் பொட்டுக் கவுண்டர், தாலி காத்த காளியம்மன், குட்டி, எங்களுக்கும் காலம் வரும், தேவன், திருமலை, சந்தோஷ் சுப்ரமணியம்