
இவர் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா படங்களில் நடித்துள்ளார்.
ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகையான இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடிக்கிறார். தெலுங்குத் திரைப்படமான கிருஷ்ணா காடி வீரா பிரேமா காதா உடன் அறிமுகமானார், அதில் அவர் நானிக்கு ஜோடியாக நடித்தார். 2017 ஆம் ஆண்டில் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இவர் ஒரு சீக்கிய குடும்பத்தில், இந்தியாவின் பட்டீந்தாவில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதார் உள்ளார். மெஹரின் ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். அவர் வாஷிங்டன் டி.சி. மற்றும் நியூயார்க் நகரத்தில் இளம் உலகளாவிய தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தனது பத்து வயதில் தனது முதல் கஸூலி இளவரசி என்ற பட்டத்தை வென்றார்.பின்னர் டொராண்டோவில் மிஸ் ஆளுமைத் தெற்காசிய கனடா 2013 இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜமீனி ஃபேஸ் மாடலிங் நிறுவனம் மூலம் பிரபலமான இவர் கனடா மற்றும் இந்தியாவில் பல வணிகரீதியான விளம்பரங்களில் நடித்தார்.
இவர் தெலுங்கு திரைப்படமான கிருஷ்ணா காடி வீரா ப்ரீமா காதாவுடன் மஹ்ரீன் அறிமுகமானார், அதில் அவர் மகாலட்சுமி பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களிலும், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் வெற்றி பெற்றது. 2017 மார்ச்சில், பாலிவுட் திரைப்படத்தில் அனுஷ்கா ஷர்மா, தில்ஜீத் தோஸன்ஜ் மற்றும் சூரஜ் ஷர்மா ஆகியோருடன் பிலிவுரி நடித்தார். சமீபத்தில் ராஜா த கிரேட், என்ற படத்தில் நடிகர் ரவி தேஜாவுடன் நடித்துள்ளார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா
