Friday, May 1
Shadow

நடிகை மவுனிகா பிறந்த தினம் இன்று

விஜய ரேகா என்ற பெயர் கொண்ட மவுனிகா, தொலைக்காட்டி தொடர்களிலும், தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்தார். மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவி மவுனிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும், 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர் 1985ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் படம் மூலம் அறிமுகமானார்.

இவர் நடித்த தமிழ் திரைபடங்கள்

உன் கண்ணில் நீர் வழிந்தால், வண்ண வண்ண பூக்கள், ராசுகுட்டி, அமராவதி, மே மாதம், சுபாஷ், என் இனிய போன்நிலவே, பானா காத்தாடி, கடைக்குட்டி சிங்கம்

இவர் நடித்துள்ள தொலைக்காட்சி தொடர்கள்

சொந்தம், சொர்க்கம் பாலு மகேந்திரா கதை நேரம், ஆனந்தம் விளையாடும் வீடு, கலாட்டா குடும்பம்