

நடிகை நிக்கி கல்ராணி கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பெங்களூரில் படிப்பை முடித்த அவரை மலையாள சினிமாதான் முதலில் வரவேற்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளப் படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார் நிக்கி.

நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து மலையாளப் படங்களில் ஒப்பந்தமான அவரைக் கன்னட திரையுலகமும் வாரி அணைத்தது. தொடர்ந்து மலையாளம், கன்னடம் எனப் பல படங்களில் நடித்தார்.
‘டார்லிங்’ என்ற திகில் படத்தில் நிஷா கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்தார் நிக்கி.

இந்தப் படமும் வரவேற்பைப் பெறத் தமிழில் தொடர்ந்து ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கலகலப்பு 2’ என்று வித்தியாசமான படங்களில் நடித்துப் பிரபலமானதாக சொல்லப்படும் அவர் இப்போது நிசமாகவே ஒரு லவ்-வில் விழுந்து விட்டதாக தகவல்
