
இவரது முழு பெயர் ஷம்மு ஷீரின். பொதுவாக தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். காஞ்சிவரம், மயிலு மற்றும் தசாவதாரம் போன்ற படங்கள் மூலமாக பிரபலம் ஆனார்.
ஷம்மு நெய்வேலியைச் சேர்ந்தவர். ஆனால் பிறந்தது ராஜஸ்தானில் உள்ள பிகானீர் நகரில். அங்கிருந்து அமெரிக்கா போய் செட்டிலான குடும்பம் அவருடையது.
இவர் சங்க கால காதல் கதையை கொண்ட பாலை படத்தில் வனப்பகுதி சூட்டிங்கில் ஆடையில்லாமல் நடித்தார்.
இவர் ஓரின சேர்க்கை குற்றமல்ல. அது தனிப்பட்டவரின் சொந்த விஷயம். உச்ச நீதிமன்றமே சாதகமான தீர்ப்பு கூறியுள்ளது. உலக நாடுகளிலும் அங்கீகரித்து உள்ளன. இதில் நாம் யார் எதிர்க்க, என்று கூறி இருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் நடிப்பதை இத்துடன் நிறுத்தப் போவதாகவும் மேற்கொண்டு மருத்துவம் படிக்கப் போவதாகவும் அறிவித்து அமெரிக்கா பயணமாகி விட்டார்.
நடிகை ஷம்மு – நடிகர் பரத் காதல் என்றும் இந்தக் காதல் திருமணப் பேச்சு வரை போயிருக்கிறது. பரத்துக்கும் ஷம்முவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருக்கிறது என்றும் தகவல் வெளியானதும், இது உண்மையில்லை என்று பரத் தரப்பினர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவர் நடித்த திரைப்படங்கள்
தசாவதாரம், காஞ்சிவரம், மலையன், கண்டேன் காதலை,
மாத்தி யோசி, பாலை, மயிலு
