Wednesday, October 28
Shadow

நடிகை ஊர்வசி பிறந்த தினம் 

ஊர்வசி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்த அவர் 2014ஆம் ஆண்டு தனது 50ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர் நடித்த படங்கள்
ஓ அந்த நாட்கள், கோப்பெருந்தேவி, கூத்தன், சிவலிங்கா, மகளிர் மட்டும், உன்னோடு கா, பென்சில், நமது, பயம் ஒரு பயணம், கடவுள் இருக்கான் குமாரு, வாய்மை, உத்தம வில்லன், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், இஞ்சி இடுப்பழகி, உன் சமையலறையில், வணக்கம் சென்னை, வெடி, வேங்கை, மன்மதன் அம்பு, பேராண்மை, வாமனன், சிவா மனசுல சக்தி, மலைக்கோட்டை, பஞ்சதந்திரம், மைக்கேல் மதன காமராஜன், தில்லுக்கு துட்டு 2, சவாலே சமாளி