Wednesday, October 28
Shadow

250 படங்களுக்குப் பிறகு… வித்தியாசமான கதைக்காக மீண்டும் நடிக்க வந்த நடிகை ரோஜா!

250 படங்களுக்குப் பிறகு… வித்தியாசமான கதைக்காக மீண்டும் லெனின் பாண்டியன் படத்தில் நடிக்க வந்த நடிகை ரோஜா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றும் வாய்ப்பு, எதிர்பாராத விதமாக அமைந்ததாக நடிகை தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில், நண்பர் சுப்பு மூலம் இயக்குநர் பாலா கூறிய கதையை கேட்டிருக்கிறார். கதை சொன்ன விதமே படத்தை முழுமையாக கற்பனை செய்ய வைத்ததால், உடனடியாக நடிக்க சம்மதித்ததாக அவர் கூறுகிறார்.

வழக்கமாக ஜாலியான, துடுக்கான அல்லது ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரங்களில் நடித்த தனக்கு, இந்தப் படத்தில் மிகவும் மென்மையான, நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரம் கிடைத்திருப்பது புதிய அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சத்யஜோதி ஃபிலிம்ஸ் போன்ற நீண்ட திரைப்பயணம் கொண்ட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பது பெருமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, புதுமுக நடிகர் தர்ஷனுடன் நடித்த அனுபவத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.

தனது திரைப்பயணத்தில் சிவாஜி கணேசன், பிரபு ஆகியோருடன் நடித்த நிலையில், தற்போது தர்ஷனுடன் இணைந்து நடிப்பதன் மூலம் ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடன் நடித்த அனுபவம் கிடைத்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரிதாவின் நடிப்பையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக மருத்துவமனை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரது நடிப்பு பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“புதுமையான கதை, நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரம் கிடைத்திருப்பதுதான் இந்த ரீ-என்ட்ரியின் சிறப்பு” என்பதே அவரது பேச்சின் சாராம்சமாக அமைந்துள்ளது.

After 250 Films, Actress Roja Returns to the Screen in Lenin Pandian for a Unique Role

Actress Roja is all set to make her return to the silver screen after a long gap with Lenin Pandian, taking on a character that is quite different from the roles she has played in the past.

Speaking about her comeback, Roja said the opportunity came to her unexpectedly. At a time when she was focusing on television shows and her political commitments, she heard the story narrated by director Bala through her friend Subbu. She revealed that the way the story was narrated immediately allowed her to visualize the entire film, prompting her to agree to the project without hesitation.

Roja, who has often appeared in lively, outspoken or dominant roles, said that playing a much softer character with greater emphasis on performance has been a new experience for her.

She also expressed her happiness about being part of a production backed by Sathya Jyothi Films, a banner with a long-standing journey in the Tamil film industry. She particularly praised her experience of working with newcomer actor Darshan.

Having acted alongside legendary actors Sivaji Ganesan and Prabhu during her career, Roja said she is delighted to now share the screen with Darshan. This has given her the unique experience of acting alongside three generations of the same family.

Roja also showered praise on Lenin Pandian heroine Sritha for her performance. She specifically highlighted Sritha’s acting in the hospital sequences and the climax, saying that her performance in these portions is sure to leave audiences emotionally moved.

Overall, Roja’s comments suggest that the highlight of her comeback is the opportunity to be part of a fresh story and portray a character that gives her ample scope to showcase her acting abilities.