Thursday, June 25
Shadow

34 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மணல் கயிறு பாகம் 2

விசு இயக்கிய, மணல் கயிறு படத்தின் இரண்டாம் பாகம், 34 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இப்படத்திலும், விசு மற்றும் எஸ்.வி.சேகர் நடிக்க, கதாநாயகனாக, எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ளார். முதல் பாகத்தில், தனக்கு எந்தமாதிரி பெண் வேண்டும் என்று, 10 கண்டிஷன் போடுவார், எஸ்.வி.சேகர். ஆனால், இரண்டாம் பாகத்தில், கதாநாயகி பூர்ணா, தனக்கு வரும் கணவன் குறித்து, 10 கண்டிஷன்களை போடுகிறார்.

மொத்தம் 32 நாட்களில் படபிடிப்பு மொத்தமும் முடித்துள்ளனர் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஜெகன்,சூரிய கோஸ், சாம்ஸ் சாமிநாதன் , மற்றும் பலர் நடிப்பில் இந்த இந்த மாதம் வெளியாகிறது இந்த படத்தை தேனாண்டாள் பிலம்ஸ் சார்பாக முரளி தயாரித்துள்ளார். 7.6.1982 அதாவது 34 ஆண்டுகளுக்கு பின் ஒருபடத்தின் இரண்டாம் பாகம் எடுக்கபடுகிறது என்றால் அது இந்த படம் தான் இதுவும் ஒரு சாதனை என்று குட சொல்லலாம்.

Leave a Reply