Thursday, September 10
Shadow

கபாலி, தெறிக்கு பிறகு சிம்புவின் அச்சம் என்பது மடமையடா

சிம்பு படங்கள் என்றாலே ரிலீஸ்யில் பிரச்சனை தான் அப்படி தான் இப்ப ரிலீஸ் ஆனால் அச்சம் என்பது மடமையடாவும் எப்பவும் யாரவது பிரச்சனையை கிளப்புவார்கள் ஆனால் இந்த முறை இவரே கிளப்பி அப்புறம் இவரே படத்தை உதவி செய்தார் இருந்தும் போன படங்களை விட வசூலில் சாதனை படைத்துள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு நேற்று (நவம்பர் 11-ம் தேதி) வெளியாகியுள்ளது.

விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

வசூலும் தமிழகம் முழுவதும் சிறப்பாகவே வந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இப்படம் முதல்நாளில் ரூ. 65 லட்சம் வசூல் செய்துள்ளதாம்.

இது கபாலி, தெறிக்கு பிறகு இந்த வருடத்தில் மிகப்பெரிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply