
சமீபத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரச்னை சிவகார்த்திகேயனின் பிரச்னை தான் இதை சிலர் தனக்கு வந்த பிரச்சனையாக பார்கிறார்கள் சிலர் அதை வைத்து குளிர் காய்கிறார்கள் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் கௌதம் மேனன் அவரி படத்தின் பிரச்சனையை கட்டத்துக்கு நான் என்ன இதற்கு சிவகார்த்திகேயன் மாதிரி அழமுடியுமா என்று நக்கல் அடித்தார் ஆனால் சிவகார்த்திகேயன் அதை பற்றி எல்லாம் கவலை படவில்லை அவர் தன் அடுத்த படத்தின் படபிடிப்புக்கு கிளம்பிவிட்டார். படபிடிப்பு ஆரம்பிக்கும் அதே நாளில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது. இப்படத்தை தொடர்ந்து 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்தடுத்து தயாரிக்கும் இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில், மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை ஏற்கெனவே நடந்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். தொடங்கிய முதல் நாளே இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, இப்படம் அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 25-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பஹத் பாசில், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சினேகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
