Wednesday, December 1
Shadow

அகடு – திரை விமர்சனம் Rank 3/5

விடியல் ராஜூ தயாரிப்பில் சுரேஷ்குமார் இயக்கியுள்ள திரைப்படம் அகடு. போதை பழக்கம் எப்படி ஒருவரது வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதை த்ரில்லர் படமாக சொல்லியுள்ளனர்.

கொடைக்கானலுக்கு நான்கு நண்பர்கள் சுற்றுலாவுக்கு வருகின்றர். அங்கு டாக்டர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சுற்றுலாவுக்கு வருகிறார். இரு தரப்பினரும் அருகருகே காட்டேஜில் தங்குகிறார்கள். திடீரென நண்பர்களில் ஒருவரையும் அந்த குழந்தையையும் காணவில்லை. இந்நிலையில் காணாமல் போன நண்பர் இறந்துவிடுகிறார். நண்பரை கொலை செய்தது யார் காணாமல் போன குழந்தை என்ன ஆனது என்பதை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர் சுரேஷ்குமார். இதனை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜான் விஜய். சுற்றுலா வரும் இருதரப்பினரும் நண்பர்கள் ஆகிறார்கள் அப்போது அங்குள்ள உள்ளூர் ரவுடிகளுடன் பிரச்னை ஏற்படுகிறது. அதன்பிறகு நண்பரில் ஒருவரும் குழந்தையும் காணாமல் போகிறார்கள். இதனால் சந்தேகப்படும் போலீஸ் சந்தேகத்தின் பேரில் மூன்று நண்பர்களையும் பிடித்து விசாரிக்கிறார்கள்.

நண்பர்களின் நடிப்பு செயற்கைத்தனமாக இருந்தாலும் முடிந்தவரை சமாளித்துள்ளனர். குழந்தை காணாமல் போனவுடன் பார்வையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட வேண்டும் என்று வனக்காவலர், நண்பர்கள், ரவுடிக்கும்பல் என அனைவரது மீதும் சந்தேகம் வரும்படி திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. ஆனால் எதிர்பாராத கிளைமாக்ஸ் அருமை. படம் பார்த்தவர்கள் கிளைமாக்ஸ் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது. இதுபோன்ற சிறிய படங்களுக்கு நாம் செய்யும் நல்லது இதுமட்டும்தான். ஜான் சிவநேசனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு ஓரளவு கைகொடுத்துள்ளன. சிறிய படமாக இருந்தாலும் நீளமாக இருக்கும் உணர்வை தவிர்க்க முடியவில்லை. முதல்பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம்பாதி அதனை சரிகட்டிவிடுகிறது.

சாம்ராட்டின் ஒளிப்பதிவு கொடைக்கானல் அழகை அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. தியாகுவின் படத்தொகுப்பு நன்று. ஜான் விஜய் சற்று ஓவர் ஆக்டிங் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம். போதைப் பழக்கம் எவ்வளவு அழிவை தரும் என்பதை முடிந்த அளவு சோர்வு இல்லாமல் சொல்லியுள்ள இயக்குனருக்கு வாழ்த்துகள்.

CLOSE
CLOSE