Thursday, May 14
Shadow

“வடசென்னை 2 குறித்து மௌனத்தை உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்… ‘ஜாலி ஓ ஜிம்கானா’வில் வைரலாகும் அப்டேட்!”

“வடசென்னை 2 குறித்து மௌனத்தை உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்… ‘ஜாலி ஓ ஜிம்கானா’வில் வைரலாகும் அப்டேட்!”

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாளாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘வடசென்னை 2’ படம் குறித்து முக்கியமான தகவலை நடிகை Aishwarya Rajesh முதல் முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த பரபரப்பான தருணம், ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று முதல் Sun NXT தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

‘வடசென்னை 2 எப்போது?’ என்ற கேள்வி பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வந்த நிலையில், தொகுப்பாளர் Jagan Krishnan உடனான சுவாரஸ்யமான உரையாடலில், ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த கேள்விக்கே நேரடியாக பதிலளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது பதில் தற்போது ரசிகர்களிடையே புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘வடசென்னை’ படத்திற்கான தனது ஆடிஷன் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இயக்குநர் Vetrimaaran தன்னிடம் இரண்டு நிமிடங்கள் இடைவிடாமல் கெட்ட வார்த்தைகள் பேசச் சொன்னதாகவும், அது மிகவும் வித்தியாசமான சோதனையாக இருந்தாலும், எந்த தயக்கமும் இல்லாமல் அதை செய்து காட்டியதாகவும் சிரிப்புடன் நினைவுகூர்ந்தார். அந்த சம்பவம் அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக மாறியதையும் பகிர்ந்துள்ளார்.

அதேபோல், தனது கல்லூரி வாழ்க்கை குறித்தும் அவர் மிகவும் இயல்பாகப் பேசியுள்ளார். பெண்கள் மட்டும் படிக்கும் கல்வி சூழலில் வளர்ந்ததால், அதற்கு வெளியேயுள்ள உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து பத்து நாட்கள் கல்லூரிக்கு செல்லாமல் இருந்த சம்பவத்தையும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அவரது இந்த நேர்மையான பகிர்வு ரசிகர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனின் கலகலப்பான தொகுப்பும், ‘ஆஃபீஸ் கானா’ இசைக்குழுவின் லைவ் எர்னஜியும் நிகழ்ச்சிக்கு கூடுதல் விறுவிறுப்பை சேர்த்துள்ளன. தகவல், நகைச்சுவை, இசை, உணர்வு என அனைத்தையும் சமநிலையாக கலந்து வழங்கும் இந்த எபிசோடு தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும், ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் அடுத்தடுத்த எபிசோடுகளில் துரு விக்ரம் ரவி மோகன் மிர்ச்சி சிவா குமரன் ஹரிஷ் கல்யாண் மஹதி ராகவேந்தர் வைபவிரட்டி அஸ்வின், மற்றும் டிஜிட்டல் உலகின் பிரபல ஜோடியான Gopi Sudhakar ஆகியோர் பங்கேற்க இருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் புதிய விருந்தினர்களுடன், புதிய அனுபவங்களையும், இதுவரை கேள்விப்படாத கதைகளையும் கொண்டு வரும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’, தற்போது தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் முக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

 

Aishwarya Rajesh Breaks Silence on ‘Vada Chennai 2’ Update in ‘Jolly O Gymkhana’!

Tamil cinema fans have finally received an exciting update about the much-awaited sequel ‘Vada Chennai 2’, as actress officially shared new information during the latest episode of ‘Jolly O Gymkhana’. The special episode is now streaming exclusively on .

For years, fans have been eagerly asking one question — “When is Vada Chennai 2 happening?” Putting an end to the speculation, Aishwarya Rajesh candidly addressed the topic during an engaging and entertaining conversation with host . Her response has now sparked fresh excitement and renewed hope among cinema lovers.

One of the most talked-about moments from the episode is Aishwarya Rajesh recalling her audition experience for ‘Vada Chennai’. She revealed that director had asked her to continuously use strong language for nearly two minutes as part of the audition. Though unusual, she accepted the challenge without hesitation and impressed the team — a memory she still considers unforgettable in her acting journey.

The episode also offers a rare glimpse into her personal life. Speaking openly about her college days, Aishwarya shared that after studying for years in all-girls institutions, she wanted to experience life beyond that environment and ended up skipping classes continuously for ten days. Her honest and humorous recollection adds a relatable and emotional touch to the conversation.

With Jagan Krishnan’s lively hosting style and the energetic contribution of the ‘Office Gaana’ music band, the episode seamlessly blends fun, music, entertainment, and exclusive revelations, making it a thoroughly engaging watch for audiences.

The excitement around ‘Jolly O Gymkhana’ doesn’t stop here. Upcoming episodes will feature popular personalities including , , , , , , , , and popular digital creators , making the show one of the most anticipated entertainment programs currently streaming.

With a fresh guest, untold stories, laughter, and surprises every Thursday, ‘Jolly O Gymkhana’ continues to emerge as a must-watch entertainment show for Tamil audiences.