
சந்தானத்தின் புதிய அவதாரம் – சிரிப்பிலும் சஸ்பென்ஸிலும் கடிக்கும் ‘லவ் பைட்’!
AGS Entertainment-ன் 29வது படைப்பு ‘Love Bite’ ப்ரோமோவால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகள், புதிய முயற்சிகள் மற்றும் வணிக வெற்றிகளை ஒருங்கே வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான , மீண்டும் ஒரு புதுமையான திரைப்படத்துடன் ரசிகர்களை கவர தயாராகியுள்ளது.
‘GOAT’, ‘Love Today’, ‘Dragon’ போன்ற மெகா ஹிட் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் 29வது திரைப்படமாக ‘லவ் பைட்’ (Love Bite) அறிவிக்கப்பட்டுள்ளது.
காமெடி ஹீரோவாக ரசிகர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் இந்த முறை அவர் வெறும் நகைச்சுவையுடன் மட்டுமல்லாமல், சஸ்பென்ஸ் மற்றும் சர்வைவல் த்ரில்லர் அம்சங்களும் கலந்த புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திக்கிறார் என்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
‘டாடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் , , , , ‘தாய் கிழவி’ புகழ் , நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா மற்றும் பியூன் சுர்ரோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
AGS Entertainment நிறுவனத்தின் முந்தைய வெற்றிப்படமான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ மூலம் தனக்கென தனி கவனம் பெற்ற இயக்குநர் இந்தப்படத்தை இயக்குகிறார். காமெடி, த்ரில்லர் மற்றும் சர்வைவல் அம்சங்களை குடும்ப ரசிகர்களுக்கும் ஏற்றவாறு இணைத்து வழங்கும் முயற்சியாக ‘லவ் பைட்’ உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியாகியுள்ள ‘லவ் பைட்’ ப்ரோமோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான ஹாரர் அல்லது காமெடி பாதையைத் தாண்டி, வித்தியாசமான டோனில் உருவாகும் இந்தப்படம் குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு வலிமை
இந்தப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி பணியாற்றுகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் இணைந்துள்ளார்.
இசையை சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் அமைக்கிறார். ஒளிப்பதிவை எஸ். யுவா கவனிக்க, கலை இயக்கத்தை வி. சசிகுமார் மேற்கொள்கிறார். ஆர். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆடை வடிவமைப்பை மீனாட்சி என். மேற்கொள்கிறார்.
மேலும், ஷியாம் முரா (கோ-ரைட்டர்), சாய் – சிவா எம். (காஸ்ட்யூம்), ஹரிஹரசுதன் – லார்வென் ஸ்டூடியோ (VFX), சிங்க் சினிமா (SFX), தபஸ் நாயக் (மிக்சிங்), வியாகி (பப்ளிசிட்டி டிசைன்), வீரா (டைட்டில் டிசைன்), ஸ்ரீஜித் குருவாயூர் மற்றும் எஸ். பாண்டியராஜன் (ஸ்பெஷல் மேக்கப்), நிகில் முருகன் (மக்கள் தொடர்பு) உள்ளிட்ட பலர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
தற்போது படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘லவ் பைட்’ ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Santhanam Steps Into A New Zone With ‘Love Bite’ – A Survival Thriller Packed With Comedy And Suspense!
AGS Entertainment’s 29th Production Creates Buzz With An Intriguing Promo
Leading production house , known for consistently delivering blockbuster entertainers and trendsetting cinema, is all set to present yet another refreshing theatrical experience with ‘Love Bite’.
Following the phenomenal success of films like ‘GOAT’, ‘Love Today’, and ‘Dragon’, producers Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh are bankrolling ‘Love Bite’ as the prestigious 29th production venture of AGS Entertainment.
Popular actor-comedian takes center stage in the film, but this time in a completely fresh avatar that blends humour with survival thriller elements. The film promises a unique mix of suspense, entertainment and edge-of-the-seat moments while retaining Santhanam’s trademark comic flavour.
Actress , who won appreciation for her performance in ‘Dada’, plays the female lead. The supporting cast features an exciting lineup including , , , , , Nirosha, Adithya Kathir, Kalki Raja and Bjorn Surrao in pivotal roles.
The film is directed by , who earlier impressed audiences with ‘Conjuring Kannappan’. With ‘Love Bite’, the filmmaker aims to create a genre-bending entertainer that combines comedy, survival and thriller elements into a wholesome cinematic package for audiences across age groups.
The recently released promo has already grabbed attention on social media and is receiving positive responses from all quarters. With its quirky tone, unusual setup and engaging visuals, ‘Love Bite’ has quickly become one of the most talked-about upcoming entertainers.
Strong Technical Team Powers The Film
Archana Kalpathi serves as the Creative Producer, while Aishwarya Kalpathi is the Associate Creative Producer. S.M. Venkat Manickam is the Executive Producer of the film.
Independent musician Foxn composes the music, while S. Yuva handles cinematography. V. Sasikumar heads the art direction department, and action choreography is handled by R. Sakthi Saravanan. Costumes are designed by Meenakshi N.
The technical crew also includes Shyam Mura (Co-writer), Sai & Siva M. (Costume Designers), Hariharasuthan of Lorven Studios (VFX Head), Sync Cinema (SFX), Tapas Nayak (Mixing), Viyaki (Publicity Design), Veera (Title Design), Sreejith Guruvayoor and S. Pandiarajan (Special Makeup), and Nikil Murukan handling public relations.
With shooting progressing at a brisk pace, ‘Love Bite’ is shaping up to be an exciting commercial entertainer that promises laughter, thrills and a completely fresh cinematic experience for audiences.
