
அஜித் நடிப்பில் இதேநாளில் 2000-ம் ஆண்டு முகவரி படம் வெளியானது. அந்த நாட்களில் பல புதுமுக இயக்குனர்களுக்கு அஜித் வாய்ப்புக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அந்தவரிசையில் முகவரி மூலம் அவர் துரை எனும் இயக்குனரை
அறிமுகப்படுத்தினார்.
லட்சியத்துக்காக நேர்மையான வழியில் போராடும் ஒரு மென்மையான இளைஞனின் படம் என்பதால் அஜித்துக்கு இந்த படம் மனதுக்கு நெருக்கமான ஒரு படமாக மாறியது. தேவாவின் பாடல்களும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் இன்றுவரை பேசப்படுகிறது. கூடவே ஜோதிகாவுக்கும் ப்ரேக் கொடுத்த படம் இது. ஆனால் அதையெல்லாம் விட இந்த படம் ஏன் ஸ்பெஷல் என்றால் அமர்க்களம், வாலி என அதிரடி மற்றும் பரிசோதனை படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு இந்த படம்தான் ஃபேமிலி ஆடியன்ஸை ஏற்படுத்தி கொடுத்தது.
அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் மேலும் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிருபித்த படமும் இந்த படம் என்று சொல்லலாம் பென்றசிகைகள் அதிகமான படமும் இது தான்.
