Saturday, April 18
Shadow

தலை ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்த விஸ்வாசம் செகண்ட் போஸ்டர் லுக்

அஜித் ரசிகர்கள் மிகவும் சோர்ந்து போய் இருந்த நேரத்தில் அவர்களுக்கு உற்சாகம் கொடுத்த செகண்ட் லுக் போஸ்டர் ஆம் ரஜினியின் பேட்டை படம் பொங்கலுக்கு வெளியாவதால் விஸ்வாசம் வெளியாகவில்லை என்று ஒரு அரசல் புரசல் செய்தி வெளியானது இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஸ்வாசம். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களுக்குப் பிறகு அஜித் – சிவா காம்போவில் நான்காவது படமாக இது உருவாகியுள்ளது.

பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் ரிலீஸாக உள்ளது. டி. இமான் இசையமைக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியானது.

விஸ்வாசம் படம் குறித்த அப்டேட்களை அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே, . #Viswasam #ViswasamThiruvizha என்ற ஹேஷ்டேக்குகள் போட்டு, படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் அவர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சத்யஜோதி பிலிம்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இதில், அஜித் தனக்கென்று தயாரிக்கப்பட்ட பிரத்தேகமான பைக்கில் ஹேப்பியாக வரும்படியாக உள்ளது. பின்னால் திருவிழா போன்று கூட்டமாக மக்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடுவது போன்று இருக்கிறது.

வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படம் ரிலீசாவதால், விஸ்வாசம் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால், அது உண்மையில்லை, படம் பொங்கலுக்கு கன்பார்ம் ரிலீஸ் என இந்த போஸ்டர் மூலம் படக்குழு உறுதியாக தெரிவித்துள்ளது.

பில்லா படத்திற்கு பிறகு அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் விஸ்வாசம். அஜித் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டு அஜித்களுக்கு ஜோடியாக ஈஸ்வரிராவ் மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். அவர்களுடன் விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.