
அஜித்தின் வி சென்டிமென்டில் அவருடைய அடுத்த படத்தின் பெயரும் விசுவாசம் என்று அமைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை ஸ்பெஷலாக படத்தின் பெயரை ரசிகர்கள் எதிர்ப்பாராத விதமாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் கதை நகைச்சுவை கதையாகவும், குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையில் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இசையமைப்பாளரை தவிர விவேகம் படத்தில் பணிபுரிந்து தொழில்நுட்ப கலைஞர்கள் தான் இப்படத்தில் வேலை செய்ய இருக்கிறார்களாம்.
அதோடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக கமிட் செய்ய படக்குழு முயற்சி செய்து வருவதாக தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.
