Wednesday, December 1
Shadow

அஜித்தின் விவேகம் படத்தின் ட்ரைலர் – விமர்சனம்

அஜித் என்றால் அது சாதனை என்று ஒரு அர்த்தம் இருக்கு என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்து இருக்கும் அதை விட அஜித் என்றால் வேறு ஒரு அர்த்தமும் இருக்கு அதாவது உழைப்பு புதுமை வித்தியாசம் இவை அனைத்தும் அஜித் என்ற மூன்று எழுத்துக்கு உண்டு என்பதையும் விவேகம் ட்ரைலர் நிருபித்துள்ளது .

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் என்று நாம் பேசுவதோடு நிறுத்தியுள்ளோம் ஆனால் அதை இயக்குனர் சிவாவும் அஜித்தும் நிருபித்துள்ளனர் என்று தான் சொல்லணும் அடேங்கப்பா என்ன மாதிரியான ஒரு மேகிங் ஆங்கில படங்கள் தோற்கும் அளவுக்கு ஒரு வித்தியாசம் இயக்குனர் சிவாவை அஜித் நம்பியதுக்கு கை மேல் பலன் கொடுத்துள்ளார். அதை விட அஜித்தை கிண்டல் செய்தவர்கள் இனியாரும் அவரின் நிழல் பக்கம் கூட போகமுடியாது என்பதை தன் ரசிகர்களுக்காக நிருபித்துள்ளார் .

அஜித் தன் ரசிகர்களுக்கு இதுவரை என்ன செய்தார் என்பது பதில் தான் இந்த விவேகம் படம் மற்றும் ட்ரைலர் இந்த ட்ரைலர் விமர்சனம் பண்ண கூட தகுதி வேண்டும் அப்படி இங்கு யாருக்கும் இல்லை என்றும் சொல்லலாம் சிக்ஸ் பேக் பற்றி பேசிய எல்லோருக்கும் நிச்சயம் இந்த ட்ரைலர் மூலம் விடைகிடைத்தது இருக்கும் என்றும் சொல்லாம்

விஜய் பேசும் வசனம் அஜித்துக்கு பொருந்துகிறது வேற வேற லெவல் என்பதுக்கு சரியான நபர் சிவா மற்றும் அஜித் என்று நிருபித்துள்ளனர் இனி அஜித்தை பற்றியாரும் விமர்சனம் பண்ண தகுதி வேண்டும் என்றும் நிருபித்துள்ளார் உழைப்பு என்பதுக்கு இந்த ஒரு ட்ரைலர் போதும் ட்ரைலர் இப்படி இருக்கு என்றால் படம் சும்மா அதிரும் தமிழ் சினிமாவின் மைல்கல் தான் இந்த விவேகம்

Leave a Reply

CLOSE
CLOSE