
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிவா இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக இவர் யார் படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ற ஒரு கேள்வி அதிகமாக ஆகி கொண்டே போகிறது நாளுக்கு நாள் ஒரு இயக்குனர் பெயர் அடிபடுகிறது அதுமட்டும் இல்லாமல் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவா தான் இயக்க போகிறார் என்றும் ஒரு சில சொல்லுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் அளவில் அஜித் தரப்பிடம் இருந்து நேற்று இரவு வந்த தகவல் என்னவென்றால் அடுத்த படத்தின் அறிவிப்பை பற்றி இப்போது ஏதும் சொல்ல இயலாது விவேகம் முடிந்தவுடன் தான் வரும் என்று தகவல்கள் கசிந்துள்ளது .
இந்நிலையில் நேற்று அஜித்தின் அடுத்த பட இயக்குனர் விஷ்ணுவர்தன்தான் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் அஜித் தரப்பில் இதுகுறித்து வேறு மாதிரி பதில் வருகிறது. விவேகம் படத்தின் வெற்றியை பொறுத்தே அடுத்த படத்தை அஜித் தேர்வு செய்வாராம். அதுவரை யாரையும் ஒப்பந்தம் செய்யமாட்டார் என கூறப்பட்டுள்ளது.
