
அஜித் சினிமாவை தவிர பல விஷயங்களில் ஆர்வம உள்ளவர் குறிப்பாக பைக் போட்டோ மற்றும் விமானம் ஓடுவதில் இப்படி பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர் அஜித் அதன் விளைவாக அஜித் போரியல் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அளவுக்கு தன்னை தயார்செய்துள்ளர் என்பது மிக பெருமையான விஷயம்.
அஜீத்குமார் தற்போது, ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு தவிர கார், பைக் ரேஸ்களில் அவருக்கு ஆர்வம் அதிகம் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அத்துடன் ரிமோட் ஹெலிகாப்டர்கள் இயக்குவதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இம்மாத இறுதியில் வெளிநாட்டில் நடக்கவுள்ள ரிமோட் ஹெலிகாப்டர் போட்டியில் சென்னை எம்ஐடி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அவர்களுக்கு அஜீத் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் எம்ஐடி வளாகத்துக்கு நேரில் சென்ற அஜீத் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். விஸ்வாசம் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் நிலையில் அதில் கிடைக்கும் இடைவேளையில் பயிற்சி அளிக்கும் பணியை கவனிக்கிறார் அஜீத்.
இதற்காக அவருக்கு சம்பளம் தர கேட்டபோது ஒவ்வொரு முறை பயிற்சி அளிக்க வரும்போதும் ஆயிரம் ரூபாய் தந்தால்போதும் என்று பெற்றுக்கொள்வதுடன் அதை மாணவர்களின் கல்வி உதவிக்கு வழங்கினார். சமீபத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வந்திருந்த அஜீத்திடம் மாணவர்கள் ரிமோட் ஹெலிகாப்டர் தொழில்நுட்பம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி அதற்கு தீர்வு கண்டனர்.
