Wednesday, June 24
Shadow

மீண்டும் ஓவியாவை ஏமாற்றிய ஆரவ்

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் 1 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானதன் மூலம், மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரவ். திருச்சியை சேர்ந்த மாடலான இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில், துல்கர் சல்மானுடன் வேலைபார்ப்பவராக சிறு வேடத்தில் தலையைக்காட்டியவர். விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். தவிர ‘ஒரு கப் காபி’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ள ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பேசப்பட்டார்.

நடிகை ஓவியா உடனான காதல் விவகாரத்தினால் ஆரவ்வுக்கு பெரிய பப்ளிசிட்டி கிடைத்தது. பிக்பாஸ் சீஸன் ஒன்னில் வெற்றிபெற்று, டைட்டிலை தட்டிச் சென்றதும் ஆரவ் பல படங்களில் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், ‘ராஜபீமா’ என்ற படத்தில் ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். நரேஷ் சம்பத் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, சைமன் கே கிங் இசையமைக்கிறார்.

ராஜ பீமா படத்தின் போஸ்டரில், யானையுடன் ஆரவ் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எனவே, யானைக்கும் ஹீரோவுக்கும் இடையிலான பந்தத்தை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் தான் மிஞ்சியது என்னமா ஓவியா இப்படி பனிட்டிய