ரஜினிகாந்த் பேட்ட படத்தை முதல் நாள் வசூலில் ஓரம் கட்டிய விஸ்வாசம்

share on:

பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட அஜித் நடித்த விஸ்வாசம் இந்த இரண்டு ஜாம்பவான்களின் படங்கள் வெளியாகியுள்ளது ஏற்கனவே யாரு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டி இருக்கும் நேரத்தில் அஜித் நேரடியாக ரஜினிகாந்த் எதிராக களம் இறங்கியுள்ளார். இதில் யாருக்கு வெற்றி என்பது தான் தற்போதைய மிக பெரிய கேள்வி இந்த சூழ்நிலையில் முதல் நாள் வசூலில் யார் அதிகம் என்பதை பார்ப்போம்

வசூலில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எந்தெந்த படம் எவ்வளவு வசூல் என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் ஆகியவை உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

சென்னையிலும், அமெரிக்காவிலும் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியானதால் வசூலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது.

ஆனால் அதே சமயம் தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகமான தியேட்டர்களில் வெளியானதால் விஸ்வாசம் பேட்டையை விட அதிகம் வசூல் செய்துள்ளது.

அந்த விவரம் இதோ

விஸ்வாசம் – ரூ 15.21 கோடி
பேட்ட – ரூ 12. 9 கோடி
#viswasam #rajinikanth #petta #ajith #ajithkumar #nayanthara, #boxoffice